இன்று விற்பனையாகவுள்ள சியோமி 'ப்ளாக் ஷார்க் 2': நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
இன்று விற்பனையாகவுள்ள சியோமி 'ப்ளாக் ஷார்க் 2': நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

இன்று விற்பனைக்கு வரவுள்ள 'ப்ளாக் ஷார்க் 2'

ஹைலைட்ஸ்
 • ப்ளாக் ஷார்க் 2 கருப்பு மற்றும் சில்வர் ஆகிய வண்ணங்களில் வெளியாகிறது
 • இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டுள்ளது
 • 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமராவை கொண்டுள்ளது

ப்ளாக் ஷார்க் 2, சியோமி நிறுவனத்தின் ஒரு கேமிங் ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகமாகியது. தற்போது இந்த ஸ்மார்ட்போன், இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனையாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை, ஜூன் 4-ஆம் தேதியான இன்று மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது. 39,999 ரூபாயை துவக்க விலையாக கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர், லிக்விட் கூல் (Liquid Cool) தொழில்நுட்பம் போன்றவற்றை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன், கடந்த மார்ச் மாதம் சீனாவில் அறிமுகமாகி, அங்கு விற்பனையானது.

சியோமி 'ப்ளாக் ஷார்க் 2': விலை

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் இரண்டு வகைகளில் அறிமுகமாகியுள்ளது.  அதில் ஒரு வகையான 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட 'ப்ளாக் ஷார்க் 2' 39,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகவுள்ளது. இதன் மற்ற வகைகளான 12GB RAM + 256GB சேமிப்பு அளவு கொண்ட 'ப்ளாக் ஷார்க் 2' விலை 49,999 ரூபாய். 

இந்த ஸ்மார்ட்போன் கருப்பு (Shadow Black) மற்றும் சிலவர் (Frozen Silver) ஆகிய இரு வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்த சியோமி 'ப்ளாக் ஷார்க் 2'-வின் விற்பனை ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஜூன் 4-ஆம் தேதியான இன்று மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது.

சியோமி 'ப்ளாக் ஷார்க் 2': சிறப்பம்சங்கள்

இரண்டு நானோ-சிம் வசதிகளை கொண்ட இந்த 'ப்ளாக் ஷார்க் 2' 6.39-இன்ச் FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம் மற்றும் 403ppi பிக்சல் டென்சிடியையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 855 ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் லிக்விட் கூல் (Liquid Cool) தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. இதனால், மற்ற ஸ்மார்ட்போன்களை விட, இதில் வெப்பத்தை வெளிக்கடத்தும் திறன் 20 மடங்கு வரை அதிகமாக இருக்கும்.

கேமரா பற்றி பேசுகையில், இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த 'ப்ளாக் ஷார்க் 2'. 48 மெகாபிக்சல் மற்றும் 12 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது இந்த கேமராக்கள். அதில் 12 மெகாப்க்சல் கேமரா, 2x ஆப்டிகல் ஜூம் வசதி கொண்டுள்ளது. மேலும், 20 மெகாபிக்சல் அளவிலான முன்புற செல்பி கேமராவை கொண்டுள்ளது. 

4,000mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் டை-C சார்ஜர் போர்ட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. OnePlus 7T, OnePlus 7T Pro சிறப்பம்சங்கள், அறிமுக தேதியுடன் கசிந்தது!
 2. Smart 'Life' Watch: 2,999 ரூபாயில் ஹார்ட் ரேட் சென்சாருடனான மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்!
 3. இந்தியாவில் அறிமுகமான ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ், பவர் பேன்க்!
 4. Realme XT: 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 4 பின்புற கேமரா அமைப்புடன் இந்தியாவில் அறிமுகம்!
 5. இன்று அறிமுகமாகும் Realme XT, இந்தியாவில் விலை என்ன, நேரடி ஓளிபரப்பை எப்படி காண்பது?
 6. Vivo Z1x: பிளிப்கார்ட், விவோ தளங்களில் முதல் விற்பனை, முழு விவரங்கள் உள்ளே!
 7. ரெடினா திரையுடன் அறிமுகமான Apple Watch Series 5: இந்தியாவில் விலை, விற்பனை?
 8. விலைக் குறைப்பை அடுத்து இந்தியாவில் எந்த iPhone எவ்வளவு விலை, முழு பட்டியல் இங்கே!
 9. இந்தியாவில் Samsung Galaxy A50s, Galaxy A30s ஸ்மார்ட்போன்கள், விலை, விற்பனை?
 10. Flipkart Big Billion Days 2019: அறிவிக்கப்பட்ட தேதிகள், எப்போது விற்பனை?
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.