2018-க்கான ஐபோனை இன்று வெளியிடுகிறது ஆப்பிள்… கசிந்து வரும் பரபர தகவல்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
2018-க்கான ஐபோனை இன்று வெளியிடுகிறது ஆப்பிள்… கசிந்து வரும் பரபர தகவல்கள்!

Photo Credit: Hi-tech.mail.

புதிய ஐபோனின் லீக் ஆன படம்

ஹைலைட்ஸ்

  • புதிய ஐபோன், ஐபோன் X போலவே இருக்க வாய்ப்புள்ளது
  • புதிய ஐபோன், டூயல் சிம் வசதி பெற்றிருக்கலாம்
  • பல வண்ணங்களில் இந்த ஐபோன் வரலாம்

ஆப்பிள் நிறுவனத்தின் உலக புகழ்பெற்ற ஐபோனின், 2018 அப்டேட்டட் மாடல் இன்று, இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகப் போகிறது. முதல் ஐபோனுக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருந்ததோ, அதைப் போலவே இன்று வெளியாகப் போகும் ஐபோனுக்கும் எக்கச்சக்க கிராக்கி. இணையத்தில் புதிய ஐபோன் தொடர்பாக, பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இதில் எத்தனை உண்மை, எத்தனை பொய் என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.

அதில் குறிப்பிடத்தக்கது, ‘இமேஜ் லீக்’. ரஷ்யாவைச் சேர்ந்த இணையதளம் ஒன்று, புதிய ஐபோன் Xs-ன் பின்புற புகைப்படங்களை முதன்முறையாக வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பின. அதன் மூலம், இந்த முறை ஐபோனில் கறுப்பு வண்ண போன் கிடைக்கும் என்று யூகிக்க முடிகிறது. பின் புறம் பெரிய சிங்கிள் கேமரா இருப்பதையும் பார்க்க முடிந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திலும் Xs, விலைப் பட்டியலில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மூலம், 65,400 ரூபாய்க்கு ஐபோன் Xs மதிப்பிடப்பட்டுள்ளது.

 

iphone hitech main1 iPhone

ஐபோன் Xs, ஆப்பிள் இணையதளத்தில்

Xs போனின் பல வேரியன்ட்களின் லைவ் படங்களே இணையத்தில் கசிந்தன. தற்போது சந்தையில் கிடைக்கும் ஐபோன் X போலவே தான் ஐபோன் Xs டிசைன் இருந்தது. ஆனால், போனின் திரை சற்றுப் பெரியது.

iphone weibo main1 iPhone

ஐபோன் Xs லைவ் படங்கள்

ஸ்பைகன் என்ற தளத்தில், ஐபோன் Xs மற்றும் ஐபோன் Xs மேக்ஸ் ஆகிய போன்களுக்கான கேசிங் குறித்து விளம்பரப்படுப்பட்டுள்ளது. அதை வைத்துப் பார்த்தாலும், ஐபோன் X-ன் வடிவமைப்பையே தற்போது வரும் போன்களும் கொண்டிருக்கும் என்பது தெரிகிறது.
iPhone spigeen main Spigen

ஐபோன் Xs, ஐபோன் Xs மேக்ஸ் கேசிங் படங்கள்

மிக முக்கியமாக இன்று வெளியாகப் போகும் ஐபோனில், டூயல் சிம் போடுவதற்கான வசதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.

கடைசியாக போன் எந்தெந்த வண்ணங்களில் வரும் என்பது குறித்தான ஒரு க்ளூவும் உள்ளது. சிம் கார்டு போடுவதற்கான ட்ரேக்களின் புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் கோல்டு, க்ரே, வெள்ளை, நீலம், சிவப்பு மற்றும் ஆரஞ்சு ஆகிய நிறங்களில் ட்ரேக்கள் இருந்தன.

இன்று புதிய ஐபோனை தவிர்த்து, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4, ஐபேட் ப்ரோ மாடல்கள், புதிய மேக் மினி, குறைந்த விலை மேக் புக், புதிய ஏர் பாட்ஸ் உள்ளிட்டவையும் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

iphone geskn main iPhone

பல வண்ணங்களில் உள்ள சிம் கார்டு ட்ரே

இந்த ஆப்பிள் நிறுவன நிகழ்ச்சி, அதன் இணையதளத்தில் நேரலை செய்யப்படும். முதன் முறையாக ட்விட்டரிலும் இந்த நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரபரப்படும். கேட்ஜெட்ஸ் 360, இந்த நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொண்டு, அப் டூ டேட் அப்டேட்டை உங்களுக்கு உடனுக்குடன் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்