அதிக ஸ்க்ரீன் ஸ்பேஸ் கொண்ட ஐபோன் வெளியாகிறதா? கசியும் தகவல்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
அதிக ஸ்க்ரீன் ஸ்பேஸ் கொண்ட ஐபோன் வெளியாகிறதா? கசியும் தகவல்கள்!

ஆப்பிள் நிறுவனம் புதிய மாடல் போன்களை இன்று வெளியிடுகிறது என்று அறிவித்துள்ளது. அதில், புதிய ஐபோன்கள், புதுப்பிக்கப்பட்ட ஐபாட் ப்ரோஸ், ஆப்பிள் வாட்சுகள், மேக் மினி ஃபோகஸ்டு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஆகியவை வெளியாக உள்ளன என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கலிஃபோர்னியாவில், இன்று நடக்க இருக்கும் நிகழ்ச்சியில், புதிய மாடல்கள் வெளியீடு நடைபெறும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று இரவு 10.30 மணிக்கு ‘ஆப்பிள் லான்ச்’ நிகழ்ச்சி தொடங்க உள்ளது.
ஐபோன் 9, ஐபோன் Xs, ஐபோன் Xs மேக்ஸ் ஆகியவை குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, புது மாடல் போன்களில் எட்ஜ் டூ எட்ஜ் ஸ்க்ரீன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

“ஐபோனின் அளவை அதிகரிக்காது, ஸ்க்ரீன் ஸ்பேஸ் மட்டும் அதிகரிக்க செய்வது ஆப்பிளின் முக்கியமான முடிவுகளில் ஒன்றாகும். இது வாடிக்கையாளர்களை கவரும்” என்று நிபுணர் பேட்ரிக் தெரிவித்துள்ளார்

உலக மொபைல் போன் விற்பனை சந்தையில், 72 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் ஆப்பிள் நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது. சாம்சங் ஸ்மார்ட் போன்களை பொறுத்த வரை, சாம்சங் கேலக்சி நோட் 9 ஸ்மார்ட் போன் கடந்த மாதம் வெளியானது. ஸ்மார்ட் போன் சந்தையில் முன்னிலை பெற்று வருகிறது.

புதுமைகளை கொண்டு புதுப்பிக்க ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில், ஸ்மார்ட் போன் மட்டுமின்றி ஆப்பிளின் மற்றுமொரு முக்கிய படைப்பான ஸ்மார்ட் வாட்ச், புதுப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் வடிவத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
  1. 3 பின்புற கேமரா, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட், அறிமுகமானது "Mi A3"!
  2. ஆகஸ்ட் 29 அன்று அறிமுகமாகிறது 'Redmi Note 8, Note 8 Pro' ஸ்மார்ட்போன்கள்!
  3. ஒரு விண்கல் பூமியைத் தாக்கும், தப்பிக்க வழிகள் இல்லை - எச்சரிக்கும் Elon Musk!
  4. 'Mi A3' ஸ்மார்ட்போனின் விலை என்ன, அறிமுகத்திற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
  5. இந்தியாவில் அறிமுகமான சாம்சங் Galaxy Note 10, Galaxy Note 10+: விலை, சிறப்பம்சங்கள்!
  6. 10,000 ரூபாயில் 4 கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது Realme 5, Realme 5 Pro!
  7. நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நுழைந்த சந்திராயன்-2: ISRO!
  8. நாளை அறிமுகமாகவுள்ள 'Mi A3' ஸ்மார்ட்போன், விலை இன்றே வெளியானது!
  9. புகைப்படங்களுடன் வெளியானது 'Redmi 8A' ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்!
  10. 'நோக்கியா 7.2' ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகின!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.