தொடங்கியது 'அமேசான் ப்ரைம் டே சேல் 2019': சிறந்த சலுகைகள் இதோ!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
தொடங்கியது 'அமேசான் ப்ரைம் டே சேல் 2019': சிறந்த சலுகைகள் இதோ!

Photo Credit: Amazon India

இன்று துவங்கிய அமேசான் ப்ரைம் டே விற்பனை ஜூலை 16 வரை நடைபெறும்

ஹைலைட்ஸ்
  • இந்த விற்பனை ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே
  • பிரபலமான பல தயாரிப்புகள் இந்த சலுகை விற்பனையில் இடம்பெற்றுள்ளது
  • எச்.டி.எஃப்.சி கார்டுகளுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி

இறுதியாக இந்த ஆண்டின் 48 மணி நேர 'அமேசான் ப்ரைம் டே' இன்று துவங்கியது.  ஜூலை 15 மற்றும் ஜூலை 16 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள இந்த விற்பனையில் மொபைல்போன், டிவி, லேப்டாப், ஹெட்போன், ஸ்பீக்கர் என அனைத்திற்கும் சலுகைகளை வழங்கியுள்ளது அமேசான் நிறுவனம். இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த விற்பனையில் பிரபல ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் விற்பனைக்கு வைத்துள்ளது அமேசான். அதுமட்டுமின்றி எச்.டி.எஃப்.சி கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடியையும் வழங்கியுள்ளது.

இந்த 'ப்ரைம் டே' விற்பனையில் அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும். அதனால், நீங்கள் ப்ரைம் வாடிக்கையாளராக இல்லை என்றால், முதலில் ப்ரைம் சந்தாவை பெருங்கள். அமேசான் நிறுவனத்தின் ஒரு வருட ப்ரைம் சந்தா விலை 999 ரூபாய். இதே ஒரு மாதத்திற்கு வேண்டுமெனில் அதன் மதிப்பு 129 ரூபாய். 

இதுமட்டுமின்றி ஏர்டெல், வோடாபோன், பி.எஸ்.என்.எல் மற்றும் ஐடியா ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்கள், சில குறிப்பிடப்பட்ட திட்டங்களில் ரீ-சார்ஜ் செய்தால், இந்த அமேசான் சந்தாவை இலவசமாகவே வாழங்குகிறது. 

அமேசான் ப்ரைம் டே விற்பனை - முதல் நாள்!

ஸ்மார்ட்போன்களுக்கான சிறந்த சலுகைகள் 

ஆப்பிள் ஐபோன் XR (Apple iPhone XR)

64GB வகை ஆப்பிள் ஐபோன் XR ஸ்மார்ட்போன் 49,999 ரூபாய் என விலை குறைந்துள்ளது, இந்த ஸ்மார்ட்போனிற்கு இணைய சந்தைகளில் வழங்கப்பட்ட சலுகைகளிலேயே சிறந்த சலுகை இதுதான். 

128GB வகை கொண்ட ஆப்பிள் ஐபோன் XR ஸ்மார்ட்போனின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையில் 54,999 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகவுள்ளது.

விலை: ஆப்பிள் ஐபோன் XR (64GB) - 49,999 ரூபாய், ஆப்பிள் ஐபோன் XR (128GB) - 54,999 ரூபாய்

சாம்சங் கேலக்சி M30 (Samsung Galaxy M30)

சாம்சங் கேலக்சி M30 ஸ்மார்ட்போனும் இந்த விற்பனையில் சலுகையை பெற்றுள்ளது. 16,490 ரூபாய் மதிப்பு கொண்ட கேலக்சி M30 ஸ்மார்ட்போன் 13,990 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகியுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் திரை, 3 பின்புற கேமரா, 16 மெகாபிக்சல் செல்பி கேமரா, 5,000mAh பேட்டரி என்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. 

விலை: 13,990 ரூபாய்​

நோக்கியா 6.1 ப்ளஸ் (Nokia 6.1 Plus)

5.8-இன்ச் திரை, ஸ்னேப்ட்ராகன் 630 எஸ் ஓ சி ப்ராசஸர், 3,060mAh பேட்டரி, 4GB RAM, 64GB சேமிப்பு என்ற அளவுகளை கொண்ட நோக்கியா 6.1 ப்ளஸ் ஸ்மார்ட்போன், இந்த விற்பனையில் 11,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகிறது

விலை: 11,999 ரூபாய்

ஓன்ப்ளஸ் 6T (OnePlus 6T) (6GB, 128GB)

ஓன்ப்ளஸ் 6T ஸ்மார்ட்போனும் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது. 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 26,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகிறது.

விலை: 26,999 ரூபாய்

அதுமட்டுமின்றி ஸ்மார்ட்போன்களுக்கு 10,400 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் சலுகைகளையும் அமேசான் நிறுவனம் வழங்கியுள்ளது

டிவிக்களுக்கான சிறந்த சலுகைகள் 

சாம்சங் 43-இன்ச் டிவி (Samsung 43-inch full-HD LED TV)

43-இன்ச் அளவிலான சாம்சங் full-HD LED டிவி இந்த விற்பனையில் சிறந்த சலுகையை பெற்றுள்ளது. இந்த டிவி, அமேசானின் ப்ரைம் டே விற்பனையில் 28,990 ரூபாய் என்ற சலுகை விலையில் விற்பனையாகிறது.

விலை: 28,990 ரூபாய்

சாம்சங் 55-இன்ச் 4K ஸ்மார்ட் டிவி (Samsung 55-inch 4K smart LED TV)

சமீபத்தில் அறிமுகமான 55-இன்ச் சாம்சங் 4K ஸ்மார்ட் டிவியும் இந்த விற்ப்னையில் சலுகையை பெற்றுள்ளது. இந்த புதிய சாம்சங் டிவி 59,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகிறது.

.விலை: 59,999 ரூபாய்

இது மட்டுமின்றி சோனி வயர்லெஸ் ஹெட்போன்கள், அமேசான் நிறுவனத்தின் தயாரிப்புகளான டிவி ஸ்டிக், ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஆசுஸ் கேமிங் லேப்டாப், மேலும் Mi A2. ரியல்மீ U1, ரெட்மீ Y3, சமீபத்தில் வெளியான ஹானர் Y9 ஸ்மார்ட்போன்கள் என அனைத்தும் இந்த விற்பனையில் சலுகையை பெற்றுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.