'அமேசான் ப்ரைம் டே 2019', சலுகை விலையில் இந்த பிரீமியம் ஸ்மார்ட்போன்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
'அமேசான் ப்ரைம் டே 2019', சலுகை விலையில் இந்த பிரீமியம் ஸ்மார்ட்போன்கள்!

ஒன்ப்ளஸ் 7 Pro-வும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

ஹைலைட்ஸ்
 • இந்த விற்பனை ஜூலை 15, 16-ல் நடைபெறவுள்ளது
 • பிரபலமான பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் இந்த சலுகை விற்பனையில் இடம்பெற்றுள்ளது
 • மேலும் பல சலுகைகளை இந்த விற்பனை கொண்டு வரவுள்ளது

ஆண்டின் மிகப்பெரிய விற்பனையான 'அமேசான் ப்ரைம் டே 2019' சேல், நடைபெற இன்னும் ஒரு வாரமே உள்ளது. முன்னதாக, அமேசான் நிறுவனம் அறிவித்ததுபோல இந்த விற்பனை, ஜூலை 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.சென்ற ஆண்டு 36 மணி நேரமாக நடந்த இந்த விற்பனையை இந்த ஆண்டு 48 மணி நேரமாக நடத்தவுள்ளது அமேசான் நிறுவனம். பல்லாயிரக்கணக்கான சலுகைகளை வழங்கவுள்ளதாக அமேசான் நிறுவனம் முன்னதாகவே அறிவித்திருந்தது. மேலும், இந்த விற்பனை பல முன்னனி ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆயிரக்கணக்கான புதிய தயாரிப்புகளை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஏற்கனவே, இருக்கும் பொருட்களுக்கும் சலுகைகளை வழங்கவுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. அதன்படி, அமேசான் நிறுவனம் இந்த விற்பனையில் சலுகைகளை பெறவுள்ள பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. முன்பு இருந்தே, இதற்கு முன்பு இல்லாத அள்விற்கு இந்த விற்பனையில் சலுகைகள் அறிவிக்கப்படும் என அமேசான் நிறுவனம் குறிப்பிட்டுவருகிறது. 

அமேசான் நிறுவனம் அறிவித்த பட்டியலில் முதலில் இடம்பெற்றிருப்பது 'ஆப்பிள் ஐபோன் XR' (Apple iPhone XR). இந்த ஸ்மார்ட்போன் 58,900 ரூபாய் என்ற விலையில் தற்போது விற்பனையாகிக் கொன்டிருக்கிறது. இந்த விற்பனையில் சலுகை பெறுவது மட்டுமின்றி, எச்.டி.எஃப்.சி கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை பெற்றால் 5000 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

4GB RAM, 128GB சேமிப்பு அளவுடன் 19,990 ரூபாயில் விற்பனைக்கு உள்ள 'ஹவாய் P30 லைட்' (Huawei P30 Lite) ஸ்மார்ட்போனும் அமேசான் வெளியிட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

 'ஆப்பிள் ஐபோன் XR' தவிர்த்து, ஆப்பின் நிறுவனத்தின் மற்ற சில ஸ்மார்ட்போன்களும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. 'ஆப்பிள் ஐபோன் 6s ப்ளஸ்' (Apple iPhone 6s Plus) மற்றும் ஆப்பிள் ஐபோன் X (Apple iPhone X) ஆகிய் ஸ்மார்ட்போன்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

சமீபத்தில் ஒன்ப்ளஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற இந்த பிரீமியம் ஸ்மார்ட்போனும் பட்டியலில் இணைய தவரவில்லை. 'ஒன்ப்ளஸ் 7 Pro' (OnePlus 7 Pro)  ஸ்மார்ட்போனும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த புதிய வரவை பெற நினைப்பவர்களுக்கு இதுதான் சரியான தருனம். இந்த ஸ்மார்ட்போனுடன் மற்றொரு ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போனும் இந்த பட்டியலில் இணைகிறது.  'ஒன்ப்ளஸ் 7 Pro'  ஸ்மார்ட்போனிற்கு முன்னதாக ஒன்ப்ளஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 'ஒன்ப்ளஸ் 6T' (OnePlus 6T)-தான் அந்த ஸ்மார்ட்போன். 

'ஓப்போ F11 Pro' (Oppo F11 Pro)-வும் சலுகை பெறவுள்ள இந்த பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரு ஸ்மார்ட்போன். 6GB RAM, 64GB சேமிப்பு அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 20,990 ரூபாய் என்ற விலையில் தற்போது விற்பனையில் உள்ளது. 

'கேலக்சி A50' ஸ்மார்ட்போனும் இந்த பட்டியிலில் இடம்பெற்றுள்ளது. 4GB RAM, 64GB சேமிப்பு அளவு கொண்ட 'கேலக்சி A50' ஸ்மார்ட்போன் 18,490 ரூபாய் என்ற விலையில் விற்பனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவை மட்டுமின்றி, விவோ நிறுவனத்தின் 'விவோ V15 Pro' (Vivo V15 Pro) மற்றும் விவோ நெக்ஸ் (Vivo Nex) ஸ்மார்ட்போன்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, நீங்கள் எந்த ஸ்மார்ட்போனை பெற விரும்பினாலும், நிச்சயம் அமேசானின் இந்த விற்பனை ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. ‘அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1’ விலை அதிரடி குறைப்பு- முழு விவரம் உள்ளே!
 2. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் இருக்கட்டும்… ‘ஸ்மார்ட் டயப்பர்’ கேள்விப்பட்டிருக்கீங்களா..?
 3. பாப்-அப் செல்ஃபி வசதியுடன் வெளியாகியுள்ள ‘ஒப்போ K3’- விலை, அம்சங்கள், அதிரடி ஆஃபர் விவரங்கள்!
 4. நோக்கியா வெளியிடும் முதல் ஆண்ட்ராய்டு போன்..!?- பரபர தகவல்கள்
 5. இன்று வெளியாகிறது ‘ஒப்போ K3’: எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்!
 6. சுழலும் கேமரா வசதியுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி A80; விலை மற்றும் ஆரம்ப தள்ளுபடி விவரம்!
 7. தொடரும் ‘ரெட்மீ K20’ விலை சர்ச்சை: மனம் திறந்த சியோமி நிறுவனம்!
 8. இந்தியாவில் நெட்பிளிக்ஸின் குறைந்த விலை 'மொபைல் ஒன்லி' திட்டம்!
 9. வைரலாகும் 'ஃபேஸ்ஆப்', இந்திய பயன்பாட்டாளர்களை ப்ளாக் செய்கிறதா?
 10. இன்று துவங்குகிறது 'ரியல்மீ X'-ன் 'ஹேட்-டூ-வெய்ட்' சேல்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.