பண்டிகை கால விற்பனை: Amazon படைத்த '99.4%' சாதனை!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
பண்டிகை கால விற்பனை: Amazon படைத்த '99.4%' சாதனை!

கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேலில் சுமார் 500 நகரங்களைச் சேர்ந்த 65,000 விற்பனையாளரிடமிருந்து ஆர்டர்களைப் பெற்றதாக அமேஸான் கூறியது

ஹைலைட்ஸ்
  • 500 நகரங்களைச் சேர்ந்த 65,000 விற்பனையாளரிடமிருந்து ஆர்டர்களைப் பெற்றது
  • ஸ்மார்ட்போன் பிரிவில், முன்னணி பிராண்டுகளில் 15 மடங்கு வளர்ச்சி
  • Smart home Echo சாதனங்கள் 70 மடங்கு வளர்ச்சியைக் கண்டன

இந்த பண்டிகை காலங்களில் 5 பில்லியன் டாலர் வாய்ப்பைப் பெறும் நோக்கில், இந்திய pin code-களில் 99.4 சதவீத ஆர்டர்களைப் பெற்றதாகக் Amazon.in வெள்ளிக்கிழமை அன்று கூறியது. கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேலில் சுமார் 500 நகரங்களைச் சேர்ந்த 65,000 விற்பனையாளரிடமிருந்து ஆர்டர்களைப் பெற்றதாகவும் கூறியது. 

15,000 க்கும் மேற்பட்ட pin code-களில் வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைமில் இணைந்ததாக அமேசான் தெரிவித்துள்ளது. சிறு நகரங்களில் இருந்து 88 சதவீதத்திற்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்களைக் கண்டறிந்ததாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Forrester கூற்றுப்படி, இந்தியாவில் ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 29 வரை சுமார் 4.8 பில்லியன் டாலர் விற்பனையை ஈட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை 80 சதவீத விற்பனை நடக்கும்.

ஸ்மார்ட்போன் பிரிவில், Amazon.in-ல்  Samsung, OnePlus, Apple, Xiaomi மற்றும் Vivo போன்ற முன்னணி பிராண்டுகளில் 15 மடங்கு வளர்ச்சி காணப்பட்டது.

Smart home Echo சாதனங்கள் 70 மடங்கு வளர்ச்சியைக் கண்டன - இது அமேசான் சாதனங்களுக்கான மிகப்பெரிய விற்பனையாகும்.

பெரிய உபகரணங்கள் வகை 8 மடங்கு வளர்ச்சியைக் கண்டது. விற்பனையில் Godrej, LG, Samsung மற்றும் Whirlpool போன்ற பிராண்டுகளில் கிட்டத்தட்ட பாதி விற்பனைக்கு மேல் ஆனது.

"இந்தியா முழுவதிலும் உள்ள சிறு வணிகங்கள் அமேசானுடன் வெற்றியைக் கண்டறிவதற்கான தொழில்நுட்பத்தைத் தழுவி வருவதோடு, வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்புள்ள மற்றும் வசதிகளுடன் கூடிய தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று அகர்வால் கூறினார்.

"EMI களைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2018-ஐ விட 1.5 மடங்கு அதிகமாகும். கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் போது ஷாப்பிங் செய்யும் புதிய வாடிக்கையாளர்கள் கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகரித்துள்ளது" என்று Amazon.in தெரிவித்துள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.