இந்த திட்டங்களுக்கு ரீ-சார்ஜ் செய்தால் தினமும் 400MB டேட்டா இலவசம்: ஏர்டெல்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
இந்த திட்டங்களுக்கு ரீ-சார்ஜ் செய்தால் தினமும் 400MB டேட்டா இலவசம்: ஏர்டெல்!

மூன்று திட்டங்களை திருத்திய ஏர்டெல்

ஹைலைட்ஸ்
 • 499 ரூபாய் திட்டத்தில் ரீ-சார்ஜ் செய்தால் 2.4GB டேட்டா
 • 448 ரூபாய் திட்டத்தில் ரீ-சார்ஜ் செய்தால் 1.9GB டேட்டா
 • 399 ரூபாய் திட்டத்தில் ரீ-சார்ஜ் செய்தால் 1.4GB டேட்டா

ஏர்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு சில புதிய சலுகைகளை வழங்கியுள்ளது. அதன்படி குறிப்பிடப்பட்டுள்ள சில திட்டங்களை ரீ-சார்ஜ் செய்தால், அந்த திட்டத்தின் டேட்டா மட்டுமின்றி, தினனும் 400MB கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படும். ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள அறிவிப்பின்படி, இந்த சலுகையை பெரும் அந்த திட்டங்கள் 399 ரூபாய், 448 ரூபாய் மற்றும் 499 ரூபாய் மதிப்பிலான திட்டங்கள். இந்த திட்டங்களில் ரீ-சார்ஜ் செய்தால் 400MB கூடுதல் டேட்டாவை பெறலாம். முன்னதாக 129 ரூபாய் மற்றும் 249 ரூபாய் திட்டங்களில் ரீ-சார்ஜ் செய்தால் 4 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் வழங்கப்படும் என இந்த நிறுவனம் அறிவித்திருந்தது. 

82 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த 499 ரூபாய் திட்டத்தில் ரீ-சார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்கள் 2GB டேட்டாவிற்கு பதில் 2.4GB டேட்டாவை இலவசமாக பெறுவர். 

அதேபோல, 82 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த 448 ரூபாய் திட்டத்தில் ரீ-சார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்கள் 1.5GB டேட்டாவிற்கு பதில் 1.9GB டேட்டாவை இலவசமாக பெறுவர். 

அதுமட்டுமின்றி, 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த 399 ரூபாய் திட்டத்தில் ரீ-சார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்கள் 1GB டேட்டாவிற்கு பதில் 1.4GB டேட்டாவை இலவசமாக பெறுவர். 

அதுமட்டுமின்றி, இந்த மூன்று திட்டங்களில் ரீ-சார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்கள் ஏர்டெல் டிவி ப்ரீமியம் சந்தாவை இலவசமாக பெறுவர்.  

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. இந்தியாவில் அறிமுகமான சாம்சங் Galaxy Note 10, Galaxy Note 10+: விலை, சிறப்பம்சங்கள்!
 2. 10,000 ரூபாயில் 4 கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது Realme 5, Realme 5 Pro!
 3. நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நுழைந்த சந்திராயன்-2: ISRO!
 4. நாளை அறிமுகமாகவுள்ள 'Mi A3' ஸ்மார்ட்போன், விலை இன்றே வெளியானது!
 5. புகைப்படங்களுடன் வெளியானது 'Redmi 8A' ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்!
 6. 'நோக்கியா 7.2' ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகின!
 7. ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை உறுதி செய்த சியோமி அதிகாரி!
 8. அறிமுகமாகவுள்ள ரியல்மீ 5, ரியல்மீ 5 Pro, இதுவரை வெளியான தகவல்கள்!
 9. சாம்சங் கேலக்ஸி M30, கேலக்ஸி M20 போன்களுக்கு புத்தம் புதிய அதிரடி தள்ளுபடி: முழு விவரம் உள்ளே!
 10. பூமியின்மீது ஒரு விண்கல் மோதலாம், எச்சரிக்கும் நாசா!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.