2019 ஐபோன் மாடல்கள் எப்படி இருக்கும்..?- வெளியான குபீர் தகவல்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
2019 ஐபோன் மாடல்கள் எப்படி இருக்கும்..?- வெளியான குபீர் தகவல்கள்!

ஆப்பிள் A13 எஸ்.ஓ.சி மூலம்தான் அனைத்து போன்களும் பவரூட்டப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைலைட்ஸ்
 • போன் பாதுகாப்பு வல்லுநரான மிங்-சி குவோ இது குறித்து தெரிவித்துள்ளார்
 • ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் அமைப்பை ஐபோன்கள் பெற வாய்ப்புள்ளது
 • 2019 ஐபோன்களில், 3 பின்புற கேமரா வரலாம்

போன் பாதுகாப்பு வல்லுநரான மிங்-சி குவோ, 2019 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகப் போகும் ஐபோன் மாடல்கள் குறித்து பல பரபரப்புத் தகவல்களை தெரிவித்துள்ளார். குவோ இது குறித்து பேசுகையில், ‘அடுத்து வரும் ஐபோனில் செல்ஃபிக்கு, மேம்படுத்தப்பட்ட 12 மெகா பிக்சல் சென்சார் பயன்படுத்தப்படும். பின்புறத்தில் 3 கேமராக்கள் இருக்கும்' என்று கூறுகிறார். தற்போது விற்பனையில் இருக்கும் லேட்டஸ்ட் ஐபோன் மாடல்களான ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் போன்களில் 2 பின்புற கேமராக்கள்தான் உள்ளது. அதேபோல முன்புறத்தில் 7 மெகா பிக்சல் கேமராதான் பொருத்தப்பட்டுள்ளது. 

மேக்ரூமர்ஸ் தளம், குவோ-வின் இந்த தகவல் குறித்து தெரிவித்துள்ளது. அடுத்து வெளியாக உள்ள அனைத்து ஐபோன்களிலும் 12 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராதான் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல ஐபோன் XR போனில் டூயல் ரியர் கேமரா இருக்கும் எனப்படுகிறது. தற்போதைக்கு ஐபோன் XR-ல் ஒரேயொரு ரியர் கேமரா, 12 மெகா பிக்சல் சென்சாரை கொண்டுள்ளது. 
 

We forecast the camera upgrade will be one of the new 2H19 iPhone's major selling points. Critical spec upgrades are as follows. (1) Rear cameras of 6.5-inch OLED, 5.8-inch OLED, and 6.1-inch LCD will likely upgrade to triple-camera and dual-camera, respectively. A super-wide camera will be newly adopted by the triple-camera system, which is equipped with the 12MP/1um CIS provided exclusively by Sony. (2) The front camera of all three new iPhone models will likely upgrade to 12MP CIS+5P lens (vs. current 7MP CIS+4P lens).

குவோ, ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் பற்றி மேலும் கூறுகையில், ‘இந்த இரு போன்களும் பின்புறத்தில் 3 கேமராக்களை கொண்டிருக்கும். அதில் 12 மெகா பிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 12 மெகா பிக்சல் வைடு-ஆங்கில் லென்ஸ் ஆகியவை அடங்கும். 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் ஓலெட் டிஸ்ப்ளே இந்த போன்கள் பெற்றிருக்கும்' என்றுள்ளார். 

2019 ஐபோன்கள், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் அமைப்பைப் பெற்றிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆப்பிள் A13 எஸ்.ஓ.சி மூலம்தான் அனைத்து போன்களும் பவரூட்டப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டின் நடுவில் இந்த சிப் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்ட வாய்ப்புள்ளது. 


 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. புகைப்படங்களுடன் வெளியானது 'Redmi 8A' ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்!
 2. 'நோக்கியா 7.2' ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகின!
 3. ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை உறுதி செய்த சியோமி அதிகாரி!
 4. அறிமுகமாகவுள்ள ரியல்மீ 5, ரியல்மீ 5 Pro, இதுவரை வெளியான தகவல்கள்!
 5. சாம்சங் கேலக்ஸி M30, கேலக்ஸி M20 போன்களுக்கு புத்தம் புதிய அதிரடி தள்ளுபடி: முழு விவரம் உள்ளே!
 6. பூமியின்மீது ஒரு விண்கல் மோதலாம், எச்சரிக்கும் நாசா!
 7. ஆகஸ்ட் 20-ல் அறிமுகமாகும் ரியல்மீ 5 Pro, இவ்வளவு குறைந்த விலையிலா?
 8. செப்டம்பர் 10-ல் அறிமுகமாகிறது 'ஐபோன் 11', iOS 13 புகைப்படங்கள் கூறும் குறிப்பு!
 9. ஜியோ பைபர் திட்டம், விலை, அறிமுக தேதி: தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்கள்!
 10. 48 மெகாபிக்சல் கேமராவுடன் 'ரியல்மீ 5 Pro', ஆகஸ்ட் 20-ல் அறிமுகம்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.