சியோமியின் முதல் லேப்டாப்பான 'ரெட்மீபுக் 14' : என்னவெல்லாம் கொண்டுவருகிறது?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
சியோமியின் முதல் லேப்டாப்பான 'ரெட்மீபுக் 14' : என்னவெல்லாம் கொண்டுவருகிறது?

ரெட்மீபுக் 14 'சில்வர்' என்ற ஒரே வண்ணத்தில் வெளியாகலாம்

ஹைலைட்ஸ்
  • 'ரெட்மீபுக் 14' உலோகத்தினால் தயாரிக்கப்படிருக்கலாம்
  • இதன் எடை 1.3 கிலோவாக இருக்கும்
  • இன்டெல் கோர் i3, கோர் i5 மற்றும் கோர் i7 என ப்ராசஸர்களை கொண்டிருக்கலாம்.

முன்னதாகவே சியோமி நிறுவனம், சீனாவில் அறிமுகப்படுத்தவுள்ள புதிய ஸ்மார்ட்போனுடன் லேப்டாப் ஒன்றையும் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாயின. இந்த வாரத்தில், சீனாவில் வெளியாகவுள்ள தனது அடுத்த ஸ்மார்ட்போனின் பெயரை வெளியிட்டார், அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் லூ வெய்பிங்.

K20 என பெயரிடப்பட்டிருந்த இந்த ஸ்மார்ட்போன், அந்த நிறுவனத்தின் 'கில்லர்' தொடரில் அறிமுகமாகவுள்ள முதல் ஸ்மார்ட்போன். அப்போது இந்த லேப்டாப் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், தற்போது இந்த லேப்டாப் குறித்த தகவல்கள் இணையதளத்தில் வெளியாகி வருகிறது. 'ரெட்மீபுக் 14' என பெயரிடப்பட்டுள்ள இந்த லேப்டாப், K20 ஸ்மார்ட்போனின் அறிமுகத்தின்பொழுது அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. ரெட்மீ மற்ற பொருட்கள் எப்படி மலிவு விலையில் கிடைக்கப்பெருகிறதோ, இந்த லேப்டாப்பின் விலையும் அவ்வாறே அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு தளங்களில் இதனை பற்றி தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. ப்ளூடூத் சிக் (Bluetooth SIG), தன் தளத்தில் இந்த 'ரெட்மீபுக் 14' லேப்டாப் பற்றிய தகவல்களை முதலில் வெளியிட்டது. இந்த தகவல்களை உறுதி செய்யும் வகையில் பிரபல தொழில்நுட்ப வல்லுனர் இஷான் அகர்வாலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். இவர், இந்த தகவல்களை மைஸ்மார்ட்ப்ரைஸ் (MySmartPrice) தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அகர்வால் கூறும் தகவல்களின்படி, இந்த லேப்டாப் 14-இன்ச் திரையை கொண்டிருக்கும். இன்டெல் கோர் i3, கோர் i5 மற்றும் கோர் i7 என மூன்று வகையான ப்ராசஸர்களை கொண்டிருக்கலாம். இதில் ஜீஃபோர்ஸ் MX250 கிராபிக்ஸ் கார்ட் பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த லேப்டாப், 4GB RAM அல்லது 8GB RAM என இரண்டு வகைகளிலும், 256GB அல்லது 128GB ஃப்ளாஷ் மெமரியையும் கொண்டிருக்கும் என கூறியுள்ளார். மற்றும், ப்ளூடூத் சிக் இந்த 'ரெட்மீபுக் 14' லேப்டாப் ப்ளூடூத் v4.0 வசதி கொண்டிருக்கும் என கூறியுள்ளது.

இணையதளத்தில் வெளியாகி, பரவலாக பகிறப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த லேப்டாப்பின் சிறப்பம்சங்கள் அடங்கிய ஒரு புகைப்படத்தில், உலோகத்தினால் தயாரிக்கபடவுள்ள இந்த லேப்டாப் 1.3 கிலோ எடை கொண்டிருக்கும், 'சில்வர்' என்ற ஒரே வண்ணத்தில்தான் வெளியாகப்போகிறது. 4GB RAM அல்லது 8GB RAM மற்றும் 256GB அல்லது 128GB ஃப்ளாஷ் மெமரி கொண்ட இந்த லேப்டாப்பில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டிருக்கும் பொன்ற தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. மேலும் இந்த லேப்டாப், விண்டோஸ் 10 அமைப்பை கொண்டிருக்கும் எனவும் குறிப்பிடிருந்தது. 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்