மாணவர்களின் கல்விக்கு உதவும் 7 புதிய மைகிரோசாப்டின் புதிய கருவிகள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
மாணவர்களின் கல்விக்கு உதவும் 7 புதிய மைகிரோசாப்டின் புதிய கருவிகள்!

மைக்கிரோசாப்ட் அறிமுகம் செய்த கிளாஸ் ரூம் பெண்

ஹைலைட்ஸ்
  • ஸ்டைலசுக்கு பதிலாக கிராபையிட் பென்சில்களை பயன்படுத்த முடியும் என்று தகவல்
  • பள்ளிகளுக்கு ஏற்ற வகையில் இந்த புதிய கருவிகள் தயாரிப்பு!
  • மாணவர்களுக்காக கிளாஸ்ரூம் பென் அறிமுகம்

படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மைக்கிரோசாப்ட் நிறுவனம் சார்பாக பள்ளிகள் பயன்படுத்தும் 7 புதிய வின்டோஸ் 10 கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.இத்துடன் மைக்கிரோசாப்ட் பென் மற்றும் மைகிரோசாப்டின் மென்பொருட்கள் என பல புதிய தொழிநுட்பங்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய அறிமுகத்தால் கல்வி பயில்வதற்க்கு மாணவர்களுக்கு எளிமையாக இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.இந்த 7 கருவிகளான லெனோவோ 100e, லெனோவா 300e, லெனோவா14w, ஏசர் டிராவல்மேட் பி1, ஏசர் டிராவல்மேட் ஸ்பீன் B1, ஏசர் டிராவல்மேட் B1-141 மற்றும் டெல் லாட்டியுட் 3300 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மைகிரோசாப்டின் கிளாஸ் ரூம் பென் K-8 பிரதியோகமாக பள்ளிகளுக்காகவும் மாணவர்களுக்காகவும் தயாரிக்கப்பட்டது. மேலும் இந்த தொழிநுட்பம் சர்வேஸ் கோவிடன் செய்ல்பட ஏளிதாகவுள்ளது.

இந்த புதிய விண்டோஸ் 10 கருவிகள் ஆபிஸ் 365 -யில் கற்கும் கருவிகளுடன் வருகிறது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எஸ் மோட் இந்த கருவிகளின் பேட்டரிகளை பாதுகாக்கிறது. மேலும் லெனோவோ 300e ஸ்டைலஸ் கருவியுடன் வெளியாகிறது.ஓருவேளை மாணவர்கள் இதை தொலைத்து விட்டால் சாதாரண No. 2 கிராபையிட் பென்சில்களை பயன்படுத்தி எழுதலாம்.

இப்புதிய கருவிகள் சுமார் 13,400 ரூபாய் முதல் தொடங்குகிறது. குரோம் புக்குகளுக்கு கடூம் நெருக்கடியை இந்த புதிய கருவிகள் கொடுத்துள்ளது.மேலும் இந்த பென் வகைகள் மிகவும் உறுதியானவை என்னும் உட்கட்டமைப்பில் டெதரிங்கிருவி பொருத்தப்பட்டிருப்பதால் மாணவர்கள் இதை தொலைக்காமல் பாதுகாக்கிறது.
பள்ளிகளுக்காக 20 பென்கள் கொண்ட செட் 57 ஆயரத்திற்க்கு விற்பணை செய்யப்படவுள்ளது. இவைகள் அனைத்தும் அடுத்த ஆண்டு வெளியாகும் என்பது கூடுதல் தகவல்.

மேலும் இந்த புதிய கருவிகளால் மாணவர்கள் செய்யும் கூட்டு பாடங்களை மதிப்பிடு செய்ய ஆசிரியர்களுக்கு எளிதாக இருக்கும் என எதிர்பார்கப்படுகறிது. அத்துடன் மாணவர்கள் சமர்பிக்கும் டாஸ்குகளை ஆசிரியர்கள் பரிசோதணை செய்யவும் அது வேறு எங்கிருந்தும் மாணவர்கள் தீருடி எழுதாமல் சுயமாக எழுதியதா என்று சோதணை செய்ய வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.

இதன் சிறப்பு அம்சமாக மாணவர்களுக்கு உதவும் வகையில் சிறுவயது முதலே கோடிங் செய்வது போன்ற பல முக்கிய கற்பிக்கும் ஆற்றல்களுடன் இந்த புதிய கருவிகள் அமைக்கப்பட்டிருக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.