கேள்விக்குறியாகும் தேர்தல்களின் பாதுகாப்பு: ஃபேஸ்புக் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
கேள்விக்குறியாகும் தேர்தல்களின் பாதுகாப்பு: ஃபேஸ்புக் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது குறித்து பரவலான சர்ச்சை எழுந்ததை அடுத்து, ஃபேஸ்புக் தேர்தல்களை பாதுகாக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தற்போது அமெரிக்காவில் ஒரு தேர்தல் வரப் போகிறது. அதற்கு முன்னெச்சரிக்கையாக, தேர்தலுடன் சம்பந்தப்பட்டுள்ள நபர்களின் ஃபேஸ்புக் கணக்குகளுக்கு அதிக பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பைலட் ப்ரோக்ராம் என்று சொல்லப்படும் இந்த நடவடிக்கை குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்புத் துறை தலைவர் நாதனீல் க்ளைஷர், தனது வலைப்பதிவில் விளக்கியுள்ளார்.

நாதனீல் அவரது வலைப்பதிவில், ‘தேர்தலில் சம்பந்தப்பட்டுள்ள வேட்பாளர்கள், அதிகாரிகள் என அனைவரும் அவர்களது ஃபேஸ்புக் கணக்கிற்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்த்துக் கொள்ளும் வசதியை அறிமுகபடுத்தியுள்ளோம். அதை பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்தலுடன் சம்பந்தப்பட்டவர்களின் ஃபேஸ்புக் கணக்குகளை பாதுகாப்பதில் பல அம்சங்களை அமல்படுத்தியுள்ளோம். அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் உதவியாக இருப்போம். முதலில் இது அமெரிக்க தேர்தலில் அமல்படுத்தப்படும். தொடர்ந்து உலக அளவில் நடக்க உள்ள தேர்தல்களிலும் இந்த பாதுகாப்பு நடைமுறைகள் அமல் செய்யப்படும்’ என்று பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் மூலம், ரஷ்யா, அமெரிக்க அதிபர் தேர்தல்களில் தலையிட்டது குறித்தான குற்றச்சாட்டுக்கு அமெரிக்க செனட் குழு முன்னிலையில் கடந்த ஏப்ரலில் பதிலளித்த மார்க் சக்கர்பர்க், ‘ரஷ்ய தலையீட்டுக்கு நாங்கள் பொறுமையாகவே எதிர்வினையாற்றினோம். அதற்கு முழு பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்’ என்று மன்னிப்பு கேட்டு அவர் தொடர்ந்து,

‘எனக்கு முன்னால் தற்போது இருக்கும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இனி வரும் தேர்தல்களில் யாருடைய தலையீடும் இல்லாமல் பார்த்துக் கொள்வது தான்’ என்று தெரிவித்தார்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் நெட்பிளிக்ஸின் குறைந்த விலை 'மொபைல் ஒன்லி' திட்டம்!
  2. வைரலாகும் 'ஃபேஸ்ஆப்', இந்திய பயன்பாட்டாளர்களை ப்ளாக் செய்கிறதா?
  3. இன்று துவங்குகிறது 'ரியல்மீ X'-ன் 'ஹேட்-டூ-வெய்ட்' சேல்!
  4. 8 மணி நேர பேட்டரியுடன் Mi ப்ளூடூத் நெக்பேண்ட், இந்தியாவில் அறிமுகம்!
  5. மூன்று பின்புற கேமராக்களுடன் 'Mi A3' ஸ்மார்ட்போன் அறிமுகம்!
  6. ‘விவோ S1’ க்ளோபல் வேரியன்ட் அறிமுகம்… முழு தகவல்கள்!
  7. “5ஜிபி இலவச இணைய சேவை!”- மீண்டும் அதிரடியில் இறங்கும் பி.எஸ்.என்.எல்
  8. டிக் டாக்கிற்கு போட்டியாக சிறந்த அம்சங்களுடன் வருகிறது புதிய ஆப்!!
  9. இன்று வெளியாகிறது எம்.ஐ A3- எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்!
  10. ரெட்மீ K20, ரெட்மீ K20 ப்ரோ போன் இன்று ரிலீஸ்: விலை & சிறப்பம்சங்கள்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.