100 மில்லியன் சந்தாதாரர்களை பெற்ற டி-சீரிஸ், உலக சாதனை!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
100 மில்லியன் சந்தாதாரர்களை பெற்ற டி-சீரிஸ், உலக சாதனை!

100 மில்லியன் சந்தாதாரர்களை பெற்ற டி-சீரிஸ், தங்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

ஹைலைட்ஸ்
  • பெவ்டைபை சேனலை முந்திய டி-சீரிஸ்.
  • 100 மில்லியன் சந்தாதாரர்களை முதலில் பெற்றுள்ளது.
  • இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.

100 மில்லியன் சந்தாதாரர்களை பெற்ற முதல் யூடுப் சேனல் என்ற பெயரை தட்டி சென்றுள்ளது, இந்த டி-சீரிஸ். யார் அதிக சந்தாதாரர்களை வைத்திருக்கிறார்கள், எந்த சேனல் முதலில் 100 மில்லியன் சந்தாதரர்களை எட்டும் என, ட்விட்டரில் ஒரே போரே நடந்துகொண்டிருக்கும். ஆமாம், போர் டி-சீரிஸ் (T-Series) மற்றும் பெவ்டைபை (PewDiePie) என்ற இரு யூடுப் சேனல்களுக்கு இடையேயான போர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த இரு சேனல்களின் சந்தாதாரர்கள் எண்ணிக்கையை நேரலையாக உடனுக்குடன் சொல்லும் வீடியோவை ஒவ்வொரு வினாடிக்கு 500 முதல் 1000 பேர் பார்ப்பதுதான். சில நேரங்களில் இதன் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். டி-சீரிஸ் vs பெவ்டைபை, இடையேயான இந்த போட்டி ஒரு முடிவை எட்டியுள்ளது. 100 மில்லியன் சந்தாதாரர்களை முதலில் எட்டி, உலக சாதனை படைத்துள்ளது டி-சீரிஸ்.

யூடுப்பில் முதன்முதலில் 100 மில்லியன் சந்தாதாரர்களை பெற்ற சேனல், என்ற இந்த் உலக சாதனையின் மகிழ்ச்சி செய்தியை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது, டி-சீரிஸ். "உலகின் மிகப்பெரிய யூடுப் சேனல் டி-சீரிஸ், 100 மில்லியன் சந்தாதாரர்களை பெற்று, இவ்வளவு சந்தாதாரர்களை பெற்ற முதல் யூடுப் சேனல் என்ற பெருமையை பெற்றுள்ளது. எங்களுடன் இருந்தமைக்கு நன்றி. டி-சீரிஸ் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.'' என்ற பதிவிட்டிருந்த இந்த டி-சீரிஸ், மொத்தமாக 70 பில்லியன்+ பார்வைகளை எட்டியுள்ளது என பெருமிதம் கொண்டுள்ளது. யூடுப் நிறுவனமும், இந்த டி-சீரிஸின் சாதனையை பாராட்டியுள்ளது.

இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பேருவதற்காக தேர்வாகியுள்ளது. முன்னதாக, இந்த சேனலின் போட்டி சேனலான பெவ்டைபை, முதன்முதலில் 50 மில்லியன் சந்தாதாரர்களை பெற்றது. ஆனால், இன்னும் இந்த சேனல் 100 மில்லியன் சந்தாதாரர்கள் என்ற எண்ணிக்கையை எட்டவில்லை. தற்போது இந்த சேனல் வைத்துள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கை 96,267,934.

டி-சீரிஸ் என்ற நிறுவனம் முதன்முதலாக 1983-ஆம் அண்டு இந்தியாவில் குல்சன் குமார் (Gulshan Kumar) என்பவர் தோற்றுவித்தார். இந்த நிறுவனம் இந்தியாவில் டெல்லியில் முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவிற்குப்பிறகு, இவரின் மகன் பூசன் குமார் (Bhushan Kumar), இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதிவியில் அமர்ந்தார். இந்த பூசன் குமார் தான், 2006-ஆம் அண்டு, டி-சீரிஸ் நிறுவனத்திற்கென ஒரு யூடுப் சேனலை உருவாக்கினார்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.