25 சதவித மக்கள் மட்டுமே இந்தியாவில் இணையம் பயன்படுத்துகின்றனர்: ஆய்வு தகவல்

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
25 சதவித மக்கள் மட்டுமே இந்தியாவில் இணையம் பயன்படுத்துகின்றனர்: ஆய்வு தகவல்

டிஜிட்டல் இந்தியா முன்னேற்றங்களுக்கு மத்தியில், 2017 ஆம் ஆண்டு ப்யூ ஆய்வு மையம் நடத்திய ஆய்வு முடிவில் இந்தியாவில் நான்கில் ஒருவர் மட்டுமே இணையதளத்தை பயன்படுத்தும் வசதி கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

37 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், தென் கொரியா நாட்டில், 96 சதவித மக்கள் இணையதளம் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பெரும்பாலான நாடுகளில், இணையதளம் பயன்படுத்தப்படுகிறது எனவும், இந்தியா, ஆப்ரிக்கா கண்டத்தை சேர்ந்த சஹாரா, அகிய இடங்களில் மிக குறைந்த அளவில் இணையத்தள வசதி சென்றடைந்துள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளன

இந்தியாவில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் ஸ்மார்ட் போன் பயன்பாடு சதவிதம், 2013 ஆம் ஆண்டு 12 சதவிதத்தில் இருந்து 2017 ஆம் ஆண்டு 22 சதவிதமாக அதிகரித்துள்ளது. அதை போல, சமூக வலைத்தளங்களின் பயன்பாடு 8 சதவிதத்தில் இருந்து 20 சதவிதமாக மாறியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆய்வில், 16 சதவித இந்தியர்கள் (18 வயதிற்கு மேற்பட்டோர்) இணையதளம் பயன்படுத்தினர். தற்போது, 2017 ஆம் ஆண்டு 25 சதவிதமாக உயர்ந்துள்ளது.

இதன் மூலம், இந்தியாவில் உள்ள 78 சதவித மக்கள் ஸ்மார்ட் போன் இல்லாமலும், 80 சதவித மக்களுக்கு சமூக வலைத்தளங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமலும் உள்ளது.

ஸ்மார்ட் போன் பயன்பாடு மற்றும் இணையதள பயன்பாடு பொறுத்த வரையில், வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. ஆசிய பசிபிக் பகுதிகளிலும் அதிகம் காணப்படுகிறது.

ஆஸ்திரேலியா, நெத்ர்லாந்து, சுவீடன், கனடா, அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்சு, ஸ்பெயி, ஆகிய நாடுகளில் பத்தில் ஒன்பது பேர் இணையதளம் பயன்படுத்துகின்றனர்.

2017 ஆம் ஆண்டின் முடிவில், 53 சதவித மக்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 19 வளர்ந்து வரும் நாடுகளில் இணையதள பயன்பாடு அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டன.

வளர்ந்த நாடுகளில், 2017 ஆம் ஆண்டு ஆய்வில் 72 சதவித மக்கள் ஸ்மார்ட் போன் வைத்துள்ளதாகவும், மொத்தமாக 42 சதவித மக்கள் ஸ்மார்ட் போன் வைத்துள்ளனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.