அதிரடி ஆஃபர்களுடன் பிளிப்கார்ட்டின் ‘பிளிப்ஸ்டார்ட் டேஸ்’ சேல் ரிட்டர்ன்ஸ்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
அதிரடி ஆஃபர்களுடன் பிளிப்கார்ட்டின் ‘பிளிப்ஸ்டார்ட் டேஸ்’ சேல் ரிட்டர்ன்ஸ்!

Photo Credit: Flipkart

Flipkart Flipstart Days sale: ’பிளிப்ஸ்டார்ட் டேஸ்’ சேலில்’ அதிரடி சலுகைகளுடன் லேப்டாப், ஹெட்போன் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கிறது.

ஹைலைட்ஸ்
  • ‘பிளிப்ஸ்டார்ட் டேஸ்’ சேல் மே.1 முதல் மே.3 வரை நடைபெறுகிறது.
  • இந்த விற்பனையில் தள்ளுபடி மற்றும் பேமெண்ட் ஆஃபர்களும் கிடைக்கிறது.
  • ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி.

'பிளிப்ஸ்டார்ட் டேஸ்' சேலை நாளை முதல் பிளிப்கார்ட் துவங்குகிறது. மே.1 முதல் மே.3 வரை இந்த சலுகை விற்பனை நடைபெறுகிறது. இந்த விற்பனையில் முன்னணி பொருட்களின் தயாரிப்புகளும் கிடைக்கிறது.

இந்த 3 நாள் விற்பனையில், ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடி இஎம்ஐ பரிமாற்றங்களுக்கும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வாரத்தில் அமேசான் இந்தியாவும் தள்ளுபடி விற்பனையை தொடங்க உள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் சாதனங்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாக இந்த பிளிப்ஸ்டார்ட் டேஸ் சேல் அறிவித்துள்ளது. இதுகுறித்து பிளிப்கார்ட் தனது தளத்தில் முக்கிய பொருட்களின் தள்ளுபடி விவரங்களை அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு தொடங்கும் இந்த விற்பனை மே.3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தள்ளுபடி விற்பனையை தவிர்த்து, வால்மார்ட் ஆன்லைன் விற்பனை தளமானது, வட்டியில்லா இஎம்ஐ திட்டத்திற்கும் தள்ளுபடிகள் அடங்கும் என தெரிவித்துள்ளது. மேலும், பெரும்பாலான பொருட்களுக்கு எக்ஸ்சேஞ் ஆஃபர்ஸ் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஜெபிஎல். சோனி, போட் உள்ளிட்ட பிராண்ட்களின் ஹெட்போன்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. பவர் பேங்க் ரூ.500 முதல் கிடைக்கிறது. ரூ.99 முதல் மொபைல் உதிரி பாகங்கள் கிடைக்கிறது.

லேப்டாப்களை பொறுத்தவரை, ரூ.13.990 முதல் கிடைக்கிறது என பிளப்கார்ட் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏஸர், ஹெச்பி, டெல், அசூஸ் உள்ளிட்ட பிராண்டுகளின் லேப்டாப்களும் இந்த தள்ளுபடி விற்பனையில் இடம்பெறுகிறது.

இவை தவிர்த்து, பிளிப்ஸ்டார்ட் டேஸ் சேலில் டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு 75 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்ஸன் 40 இன்ச் புல் ஹெச்டி ஸ்மார்ட் டிவி ரூ.17,499ல் கிடைக்கிறது. இதில், மேலும் 10 சதவீத தள்ளுபடியும் பெறலாம் என பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.