ஆக்சிஸ், மாஸ்டர்கார்டுடன் 'ஃப்ளிப்கார்ட்', புதிய கிரடிட் கார்டு அறிமுகம்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ஆக்சிஸ், மாஸ்டர்கார்டுடன் 'ஃப்ளிப்கார்ட்', புதிய கிரடிட் கார்டு அறிமுகம்!

ஜூலை மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த கார்டு வழங்கப்படும்

ஹைலைட்ஸ்
  • ஃப்ளிப்கார்ட், மின்த்ரா மற்றும் 2GUD பரிவர்த்தனைகளுக்கு 5% தள்ளுபடி
  • இந்த கார்டுக்கு ஆண்டு சந்தாவாகவும் 500 ரூபாய் செலுத்த வேண்டும்
  • 4000-த்திற்கும் மேற்பட்ட உணவகங்களில் 20 சதவிகிதம் வரை தள்ளுபடி

கிரடிட் கார்டு விளையாட்டில் தற்போது ஃப்ளிப்கார்ட்டும் இணைந்துள்ளது. ஆக்சிஸ் வங்கி மற்றும் மாஸ்டர்கார்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள ஃப்ளிப்கார்ட், தனது முதல் கிரடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது.முன்னதாகவே ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து ஆக்சிஸ் வங்கி பஸ் கிரடிட் கார்டுகளை ஃப்ளிப்கார்ட் அறிமுகப்படுத்தியிருந்தாலும், இதுதான் ஃப்ளிப்கார்ட்டின் அதிகாரப்பூர்வமான முதல் கிரடிட் கார்டு. முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட பஸ் கிரடிட் கார்டு ஃப்ளிப்கார்ட்டில் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 5 சதவிகிதம் தள்ளுபடியை அறிவித்திருந்தது. அதேபோல, இந்த கிரடிட் கார்டும் பல தள்ளுபடி சலுகைகளுடனேயே அறிமுகமாகியுள்ளது. 

ஃப்ளிப்கார்ட் கிரடிட் கார்டு சலுகைகள்!

 இந்த கார்டை கொண்டு ஃப்ளிப்கார்ட் (Flipkart), மின்த்ரா (Myntra) மற்றும் 2GUD ஆகியவற்றில் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு 5 சதவிகிதம் தள்ளுபடி.

 இந்த கார்டை கொண்டு மேக் மை ட்ரிப் (MakeMyTrip), கோஐபிபோ (Goibibo), உபர் (Uber), PVR, கியூர்ஃபிட் (Curefit) ஆகியவற்றில் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு 4 சதவிகிதம் தள்ளுபடி.

அர்பங்கிளாப் (UrbanClap)-ல் மேற்கோள்ளும் பரிவர்த்தனைக்கு 1.5 சதவிகிதம் தள்ளுபடி.

இவற்றில் வழங்கப்படும் தள்ளுபடிகள், ஒவ்வொரு மாதமும் சமந்தப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் தானாகவே சேர்ந்துவிடும். இவை அனைத்திலும், அளவற்ற தள்ளுபடியை ஃப்ளிப்கார்ட் வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

4000-த்திற்கும் மேற்பட்ட உணவகங்களில் இந்த கார்டுகளை பயன்படுத்தி 20 சதவிகிதம் வரை தள்ளுபடியை பெறலாம்.

மேலும், மாதம் 500 ரூபாய் எரிபொருள் கூடுதல் கட்டண தள்ளுபடியாக வழங்கவுள்ளது. 

இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளவும், மற்றும் ஆண்டு சந்தாவாகவும் 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஜூலை மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ள இந்த கிரடிட் கார்டுகள் வரும் காலத்தில் அனைவருக்கும் வழங்கப்படும்.

முன்னதாகவே ஸ்னேப்டீல் (Snapdeal) எச்.டி.எஃப்.சி வங்கியுடன் இணைந்து, ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) எஸ்.பி.ஐ வங்கியுடன் இணைந்து, அமேசான் (Amazon) ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து இம்மாதிரியான கிரடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீபத்தில் பேடிஎம் (Paytm) மற்றும் ஓலா (Ola) நிறுவனங்கள் கூட இம்மாதிரியான கார்டுகளை அறிமுகம் செய்திருந்தது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.