துவங்கியது ஃப்ளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் டேஸ்: சிறந்த சலுகைகள் விவரம் உள்ளே!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
துவங்கியது ஃப்ளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் டேஸ்: சிறந்த சலுகைகள் விவரம் உள்ளே!

Photo Credit: Flipkart

இன்று துவங்கிய பிக் ஷாப்பிங் டேஸ் மே 19 வரை தொடரும்

ஹைலைட்ஸ்
  • சிறந்த சலுகைகளுடன் இன்று துவங்கிய பிக் ஷாப்பிங் டேஸ்
  • இந்த பிக் ஷாப்பிங் டேஸ் மே 19-ஆம் தேதி வரை தொடரும்
  • சிறந்த சலுகைகள் தற்போது ஃப்ளிப்கார்ட் தளத்தில் கிடைக்கப்பெருகிறது

ஃப்ளிப்கார்ட் நிறுவனம், சென்ற வாரம் தனது சம்மர் சேலை முடித்த ஒரு சில நாட்களிலேயே, அடுத்த அதிரடியாக ‘பிக் ஷாப்பிங் டேஸ்' விற்பனை குறித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த விற்பனை மே 15 முதல் மே 19 வரை, ஐந்து நாட்கள் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தது. அந்த "பிக் ஷாப்பிங் டேஸ்" விற்பனை இன்று இரவு 12 மணிக்கு அனைவருக்கும் துவங்கியது.

இந்த நிறுவனம், "மொபைல்போன்கள் - என்றும் இல்லாத அளவு குறைந்த விலையில்" என ஸ்மார்ட்போன்களுக்கு பல சலலுகைகளை வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, லேப்டாப், டிவி, வீட்டு சாதனங்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் ஆடைகளென பலவற்றிற்கு சலுகைகளை அறிவித்திருக்கிறது. மேலும் இந்த விற்பனையில், நீங்கள் பெரும் ஒவ்வொரு மொபைல்போனையும் எச் டி எப் சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக பணம் செலுத்தி பெற்றுக்கொண்டால், 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும் எனவும் அறிவித்திருந்தது.

ஃப்ளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் டேஸ்: சிறந்த சலுகைகள் என்னென்ன?

ஓப்போ K1(Oppo K1) (4GB, 64GB)

18,990ரூபாய் மதிப்புள்ள ஓப்போ K1-ன் விலை இந்த ஃப்ளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் டேஸ்-ல் 14,990 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்னேப்ட்ராகன் 660 எச் ஓ சி ப்ராசஸர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்பொனில் 25 மெகாபிக்சல் அளவிலான முன்புற கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. 

விலை: 14,990 ரூபாய்

நோக்கியா 6.1 ப்ளஸ் (Nokia 6.1 Plus) 

இந்த ஃப்ளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையில் இந்த நோக்கியா 6.1 ப்ளஸ் மீண்டும் குறைந்த விலையில் 12,999 ரூபாய்க்கு கிடைக்கவுள்ளது. 4GB RAM கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 636 எச் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு பின்புற கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 16 மெகாபிக்சல் அளவு கொண்ட ஒரு மின்புற கேமராவையும் கொண்டுள்ளது. 

விலை: 12,999 ரூபாய்

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 (Apple Watch Series 4)

முதல்முறையாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4-ம் தள்ளுபடி விலையில், இந்த ஃப்ளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையில் கிடைக்கப்பெறவுள்ளது. 40mm வகை கொண்ட இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4-ன் விலை ஃப்ளிப்கார்ட்டில் 34,900 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது. இதன் MRP விலை 40,900 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முந்தைய மாடல்களை விட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 பல மேம்பாடுகளை கொண்டு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

விலை: 34,900 ரூபாய்

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 (Apple Watch Series 3)

ஒருவேளை, குறைந்த விலையில் நீங்கள் ஸ்மார்ட்வாட்சை பெற வேண்டும் என்றால், இந்த பிக் ஷாப்பிங் டேஸ்-ல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3. இந்த விற்பனை காலத்தில் இதன் விலை 21,900 ரூபாயாக இருக்கும். மேலும் இதன் MRP விலை 28,900 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்வாட்ச் GPS மற்றும் இதய துடிப்பை அளக்கும் சென்சார் ஆகியவை கொண்டுள்ளது.

விலை: 21,900 ரூபாய்

சாம்சங் கேலக்சி J6 (Samsung Galaxy J6) (4GB, 64GB)

முன்னதாக சாம்சங் கேலக்சி J6 (Samsung Galaxy J6) என்றும் இல்லாத அளவில் குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்த ஃப்ளிகார்ட் அதன் விலையையும் குறைத்துள்ளது. ரூபாய் 12,900 மதிப்புள்ள சாம்சங் கேலக்சி J6 (4GB, 64GB), இதுவரை என்றும் இல்லாத அளவு ரூபாய் 9,490 விலைக்கு விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை: 9,490 ரூபாய்

நோக்கியா 5.1 ப்ளஸ் (Nokia 5.1 Plus) 

நோக்கியா 5.1 ப்ளஸ் விலையையும் மிகவும் குறைத்துள்ளது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். இந்த ஃப்ளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையில் நோக்கியா 5.1 ப்ளஸ்-ன் விலை 7,999 ரூபாய் மட்டுமே. MRP விலை 13,199 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 3GB RAM கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P60 எச் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு பின்புற கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 8 மெகாபிக்சல் அளவு கொண்ட ஒரு மின்புற கேமராவையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

விலை: 7,999 ரூபாய்

அசுஸ் ஜென்போன் மேக்ஸ் Pro M1(Asus ZenFone Max Pro M1) (4GB, 64GB)

என்றும் இல்லாத அளவிற்கு அசுஸ் ஜென்போன் மேக்ஸ் Pro M1-வையும் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யவுள்ளது ஃப்ளிப்கார்ட். 12,999 ரூபாய் மதிப்புள்ள அசுஸ் ஜென்போன் மேக்ஸ் Pro M1(Asus ZenFone Max Pro M1) என்றும் இல்லாத குறைந்த விலையில் ரூபாய்  8,999 கிடைக்கும் என ஃப்ளிப்கார்ட் நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 636 எச் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மிகப்பெரிய அளவிலான 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 

விலை: 8,999 ரூபாய்

ஹானே 10 லைட் (Honor 10 Lite) (4GB, 64GB)

ஹானர் போன்களுக்கும் பல சலுகைகளை அளிக்கிறது இந்த விற்பனை.  அந்த வகையில் ஹானர் 10 லைட்(Honor 10 Lite)-இன் விலை ரூபாய் 12,999 ஆக விலை குறைத்து விற்பனைக்கு வைத்துள்ளது. 4GB RAM கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் ஹவாய் கிரின் 710 எச் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 6.21 இன்ச் FHD+ திரை மற்றும் 3400mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன்.

விலை: 12,999 ரூபாய் 

எம் ஐ டிவி 4A Pro 43 (Mi LED TV 4A Pro 43)

நீங்கள் மிக குறைந்த விலையில் ஒரு டிவியை பெற வேண்டும் என்றால் இந்த எம் ஐ டிவி சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். 25,999 ரூபாய் மதிப்பு கொண்ட எம் ஐ டிவி 4A Pro 43 21,999 ரூபாயாக விலை குறைக்கப்பட்டு இந்த பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. எம் ஐ டிவிக்கள், இம்மாதிரி விலை குறைப்பு செய்து விற்பனைக்கு வைக்கப்படுவது இதுவே முதல்முறை. 

விலை: 21,999 ரூபாய்
 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்