வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இருக்கிறதா..?- எப்படி தெரிந்துகொள்வது?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இருக்கிறதா..?- எப்படி தெரிந்துகொள்வது?

வாக்களர் பட்டியலில் உங்களின் பெயர் இருக்கிறதா என அறிந்து கொள்ள...

ஹைலைட்ஸ்
 • வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என எளிதாக அறிந்து கொள்ள முடியும்
 • EPIC எண்ணை வைத்து தெரிந்து கொள்ளலாம்
 • EPIC எண் இல்லாமல் கூட உங்களின் விவரங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம்

இந்தியாவில் இது தேர்தல் சீசன். மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்கு சொந்தமானது.

பல கோடி மக்கள், இந்த லோக்சபா தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆகவே, வாக்காளர் பட்டியலில் சிலரது பெயர் விட்டுப்போவது உண்டு.

வாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்வது இப்போது எளிதாகிவிட்டது.

வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள:

 1. தேசிய வாக்காளர் சேவை தளமான NVSP யின் எலக்ட்ரோல் தேடல் பக்கத்திற்கு செல்லுங்கள் (Electoral Search).
 2. இதில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை இரண்டு வழிகளில் அறிந்து கொள்ள முடியும். உங்களை குறித்தான் தகவல்களை பதிவு செய்வது மூலம் உங்கள் பெயர் இருக்கிறதா என அறிந்து கொள்ளலாம்.

இல்லையெனில் வாக்காளர் அட்டையில் இருக்கும் EPIC எண்ணை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

EPIC எண் இருந்தால்,

 1. NVSP Electoral Search பக்கத்திற்கு செல்லுங்கள்.
 2. Search by EPIC No என இருக்கும் குறியீட்டை க்ளிக் செய்யுங்கள்
 3. EPIC எண்ணை அந்த கட்டத்தில் பதிவு செய்த பின், மாநிலத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் Search என இருப்பதை க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.
 4. உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் பட்சத்தில், Search கீழ் உங்களின் பெயர் காண்பிக்கப்படும்.

EPIC எண் இல்லை என்றால்,

 1. NVSP Electoral Search  பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
 2. Search by Details. என இருப்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
 3. உங்களின் பெயர், பாலினம், வயது, தொகுதி முதலிய விவரங்களை அதில் பதிவிட வேண்டும். பின் Search என இருப்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
 4. உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் பட்சத்தில், Search கீழ் உங்களின் பெயர் காண்பிக்கப்படும்.

தமிழ்நாடு, ஆந்திரா, பிகார் ஆகிய மாநிலங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை எஸ்.எம்.எஸ் மூலம் அறிந்து கொள்ளலாம். அதற்கு Election Commission's page  பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதன் பின் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதில் எஸ்.எம்.எஸ் மூலம் அறிந்து கொள்ளும் முறை இருக்கும்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. Redmi Note 8 ஸ்மார்ட்போன்கள், ஒரு நாளில் 1 மில்லியன் முன்பதிவு!
 2. Nokia 7.2 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் வெளியானது!
 3. 55-இன்ச் QLED திரை கொண்ட OnePlus TV!
 4. Android Q இப்போது Android 10 மட்டுமே, இனிப்பு பெயர்கள் எதுவும் இல்லை!
 5. 3 பின்புற கேமராக்களுடன் அறிமுகமானது சாம்சங் Galaxy A50s, Galaxy A30s!
 6. இன்று விற்பனையில் Mi A3, விலை, சிறப்பம்சங்கள், சலுகைகளை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்!
 7. 3 பின்புற கேமரா, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட், அறிமுகமானது "Mi A3"!
 8. ஆகஸ்ட் 29 அன்று அறிமுகமாகிறது 'Redmi Note 8, Note 8 Pro' ஸ்மார்ட்போன்கள்!
 9. ஒரு விண்கல் பூமியைத் தாக்கும், தப்பிக்க வழிகள் இல்லை - எச்சரிக்கும் Elon Musk!
 10. 'Mi A3' ஸ்மார்ட்போனின் விலை என்ன, அறிமுகத்திற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.