சாம்சங் வழங்கும் 'அன் பாக்ஸ் மேஜிக் வரிசை'; முழு விவரம்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
சாம்சங் வழங்கும் 'அன் பாக்ஸ் மேஜிக் வரிசை'; முழு விவரம்!

ரூ.24,900 முதல் விற்பனைக்கு வெளியாகும் சாம்சங்கின் ஸ்மார்ட் டிவி தயாரிப்புகள்!

ஹைலைட்ஸ்
 • ரூ.24,900 முதல் விற்பனை செய்யப்படும் சாம்சங்கின் ஸ்மார்ட் டிவிகள்!
 • பல திரை அளவுகள் மற்றும் சிறப்பு அமைப்புகளுடன் வெளியாகியுள்ளது.
 • ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் வெளியாகியுள்ளது.

பல முன்னணி தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது சிறந்த தயாரிப்புகளை அறிமுகம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. இதுபோன்ற தொலைக்காட்சிகளை உற்பத்தி செய்வதில் முன்னோடியான சாம்சங் நிறுவனமும் தனது தயாரிப்புகளை இந்திய சந்தைகளில் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. 

தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனமான 'சாம்சங்' கடந்த திங்கட்கிழமையன்று 'அன் பாக்ஸ் சீரிஸ்' என்ற பெயரில் தனது சமீபத்திய தொழில்நுட்பங்களை கொண்ட புதிய வகை ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை அறிமுகம் செய்தது. பல சிறப்பு அமைப்புகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் தொலைக்காட்சிகள், ரூ.24,900 முதல் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த தயாரிப்புகள் 32- 82 இஞ்ச் திரை, ஹெச்டி மற்றும் 4கே ரெசலுயூஷன் போன்ற அமைப்புகளை கொண்டுள்ளது.

சாம்சங் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புது வரிசை ஸ்மார்ட் டிவி-களுக்கு தனிப்பட்ட அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பின் மூலம் போனில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை லைவ் காஸ்டிங்  முறையால் தொலைக்காட்சியுடன் கனெக்ட் செய்ய முடிகிறது.

மேலும் இவைகளை சேமித்து கொள்ள கிளவுட் சேவை மற்றும் இசை அமைப்புகளை கொண்ட கருவி ஆகியவை இந்த புதிய வரிசை தொலைக்காட்சிகளில் பொருத்தப்பட்டுள்ளது. இவைகள் மட்டுமின்றி ஸ்மார்ட் தொலைக்காட்சிகளுகே உரிய சிறப்பம்சமான நெட்ஃபிளிக்ஸ், ஆமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் யூடியுப் போன்ற ஆப்களும் இந்த தயாரிப்புகளில் இடம்பெற்றுள்ளது.

மேலும் சாம்சங் நிறுவனத்தின் இந்த தொலைக்காட்சிகளை ஆன்லைன் தளங்கள் மற்றும் ஆஃப்லைன் கடைகளிலும் வாங்கலாம். அதுபோல் சாம்சங் நிறுவனம் சார்பில் சிறப்பு ரீடெய்ல் கடைகளை அமைத்துள்ளது. இதன் மூலம் நம்மால் தொலைக்காட்சிகளை நேரில் சென்றே வாங்க முடிகிறது. மார்கெட்டில் விற்பனைக்கு வெளியாகியுள்ள மற்ற ஸ்மார்ட் தொலைக்காட்சிகளின் விலையை ஓப்பிடும்போது சாம்சங் தயாரிப்பின் விலைகள் சற்று உயர்ந்தே காணப்படும் நிலையில் இந்த பிராண்டின் தரம் மிகவும் சிறப்பாகவே இருக்கிறது.

சமீபத்தில் சாம்சங் சார்பில் அறிமுகமான NU6100 வரிசை கொண்ட 4கே தொலைக்காட்சிகள் (ரூ.41,900) முதல் அறிமுகமான நிலையில் அவைகளின் திரை அளவு 43- 55 இஞ்ச் வரை மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை உறுதி செய்த சியோமி அதிகாரி!
 2. அறிமுகமாகவுள்ள ரியல்மீ 5, ரியல்மீ 5 Pro, இதுவரை வெளியான தகவல்கள்!
 3. சாம்சங் கேலக்ஸி M30, கேலக்ஸி M20 போன்களுக்கு புத்தம் புதிய அதிரடி தள்ளுபடி: முழு விவரம் உள்ளே!
 4. பூமியின்மீது ஒரு விண்கல் மோதலாம், எச்சரிக்கும் நாசா!
 5. ஆகஸ்ட் 20-ல் அறிமுகமாகும் ரியல்மீ 5 Pro, இவ்வளவு குறைந்த விலையிலா?
 6. செப்டம்பர் 10-ல் அறிமுகமாகிறது 'ஐபோன் 11', iOS 13 புகைப்படங்கள் கூறும் குறிப்பு!
 7. ஜியோ பைபர் திட்டம், விலை, அறிமுக தேதி: தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்கள்!
 8. 48 மெகாபிக்சல் கேமராவுடன் 'ரியல்மீ 5 Pro', ஆகஸ்ட் 20-ல் அறிமுகம்!
 9. ஆகஸ்ட் 21-ல் அறிமுகமாகிறது 'Mi A3' ஸ்மார்ட்போன், தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
 10. 9,999 ரூபாய்க்கு 3 பின்புற கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது எச்.டி.சி 'வைல்ட்பயர் X'!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.