15-வது பிறந்தநாளை கொண்டாடும் ஜிமெயில்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
15-வது பிறந்தநாளை கொண்டாடும் ஜிமெயில்!

இன்பாக்ஸ் மெசேஜ்களுக்காக புதிய அப்டேட்களை தயாரிப்பதில் கூகுள் நிறுவனம் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது

ஹைலைட்ஸ்
 • சுமார் 1.5 பில்லியன் வாடிக்கையாளர்களை ஜிமெயில் கொண்டுள்ளது.
 • இந்த தயாரிப்பு கடந்த 2004 ஆம் ஆண்டில் உறுவாக்கப்பட்டது.
 • நிறுவப்பட்டபோது 1ஜிபி சேமிப்பை மட்டுமே கொண்டிருந்தது!

கூகுள் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான ஜிமெயிலுக்கு 15 வயது ஆகிவிட்டது என்றால் நம்ப முடிகிறதா? உலகம் முழுவதும் சுமார் 150 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு இந்த தயாரப்பு, ஏப்ரல் 1 ஆம் தேதி 2004 ஆம் ஆண்டு பாவுல் புச்சிட் என்னும் நபரால் உருவாக்கப்பட்டது.

ஜிமெயில் துவங்கிய காலக்கட்டத்தில் ஒரு வாடிக்கையாளர்க்கு 1 ஜிகாபையிட் சேமிப்பு வசதி மட்டுமே வழங்கப்பட்டது. இன்றோ 15ஜிபி இலவச சேமிப்பு வழங்கும் ஜிமெயில் மூலம் 50 எம்பி ஃபைல்களைப் பெற முடிகிறது.

இதை விட பெரிய ஃபைல்களை அனுப்ப 'கூகுள் டிரைவ்' லிங்கை பயன்படுத்த வேண்டும். யாஹூ மெயில் சேவையை மாதம் தோறும் 228 மில்லியன் பயனாளிகள் உபயோகிக்கின்றனர். ஜிமெயில், ஏஓஎல் மெயில் மற்றும் ஹாட் மெயில் போன்ற தயாரிப்புகளை வாங்கியது குறிப்படத்தக்கது.

இலவச பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்யப்பட்ட ஜிமெயில், பெரிய நிறுவனங்களின் சேவைக்காக தற்போது கட்டணம் பெற்றுக்கொண்டு சிறப்பு சேவை அளிக்கிறது. ஜிமெயில் துவங்கிய ஒரு வருடத்தில் துவங்கப்பட்ட கூகுள் மேப்ஸ் தற்போது மிகவும் பிரபலமாகிவிட்டது. அதுமட்டுமின்றி யூடியூப், குரோம் பிரவுசர் போன்ற முன்னணி தயாரிப்புகளை அறிமுகம் செய்து உலகத்தில் இருக்கும் பெரும்பான்மையான மக்களை சென்றடைகிறது கூகுள் நிறுவனம்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கூகுள் நிறுவனம், ஜிமெயிலுக்கு பல புதிய அப்டேட்களை அறிமுகம் செய்தது. இந்த புதிய அப்டேட் மூலம் மெயிலுடன் இணைக்கப்பட்டுள்ள ஃபைல்களை விரைவில் நம்மால் பார்க்கப்படுகிறது. மேலும் இன்பாக்ஸ் மெசேஜ்களுக்காக புதிய அப்டேட்களை தயாரிப்பதில் கூகுள் நிறுவனம் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. Amazon Sale : 100-க்கும் அதிகமான மொபைல்களுக்கு அமேசானில் அதிரடி விலைக்குறைப்பு!!
 2. முதன்முறையாக விற்பனையைத் தொடங்கும் Mi Band 4; சிறப்புகள் என்ன? - முழு விவரம் உள்ளே!
 3. Redmi 8A செப்டம்பர் 25-ல் ரிலீஸ்: விலை, சிறபம்சங்கள் விவரம்!
 4. Flipkart Big Billion Days Sale 2019: எந்தெந்த போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? முழு விவரம்!
 5. பல நாட்களாக எதிர்பார்த்தது… WhatsApp வெளியிட்டுள்ள புதிய Update!
 6. 6,000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்ட Samsung Galaxy M30s; ஆமோலெட் டிஸ்ப்ளே கொண்ட Samsung Galaxy M10s போன்கள் வெளியாயின: ஹைலைட்ஸ்!
 7. Stolen Mobile Phone: போன் திருட்டா அல்லது தொலைந்துவிட்டதா..? - இனி அரசே அதை கண்டுபிடித்து தரும்!
 8. Mi Band 4, Mi TV 65-இன்ச் இன்று அறிமுகமாக வாய்ப்பு- முழு விவரம் உள்ளே!
 9. OnePlus 7T, OnePlus 7T Pro சிறப்பம்சங்கள், அறிமுக தேதியுடன் கசிந்தது!
 10. Smart 'Life' Watch: 2,999 ரூபாயில் ஹார்ட் ரேட் சென்சாருடனான மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.