இந்திய விமானப்படை குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், படைகளில் சேர அவர்களை ஊக்குவிப்பதற்கும், விமானப்படைத் தலைவர் மார்ஷல் பி.எஸ்.தனோவா (Marshal BS Dhanoa), கடந்த புதன்கிழமை போர் அடிப்படையிலான 'இந்தியன் ஏர் ஃபோர்ஸ்' ('Indian Air Force: A cut above') மொபைல் விளையாட்டை புதுடில்லியில் தொடங்கிவைத்தார்.
முன்னதாக ஜூலை 20 அன்று, ஐ.ஏ.எஃப் விளையாட்டின் டீஸர் வெளியிடப்பட்டது.
இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட டீஸர், இந்த விளையாட்டு ஒற்றை வீரர் விளையாடக்கூடிய விளையாட்டு மற்றும் பல போர் விமானங்களுடன் வான்வழிப் போர், வெவ்வேறு நிலக் கட்டமைப்புகள் ஆகியவற்றை காட்டியது.
"நான் ஒரு விமான வீரன், பெருமைமிக்க, நம்பகமான மற்றும் அச்சமற்றவன். ஒவ்வொரு செயலிலும், எனது தாய்நாட்டின் மரியாதையையும் பாதுகாப்பையும் முதன்மையில் வைக்கிறேன்," என்ற அந்த டீஸர் இந்த விளையாட்டிற்கான கதைக்களத்தை கூறியுள்ளது.
இந்த விளையாட்டில் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தாமனை போன்று ஒரு துப்பாக்கி ஏந்திய மீசையுடன் கூடிய ஒரு பாத்திரம் இடம்பெற்றுள்ளது. அவர் பாலாகோட் வான்வழித் தாக்குதலின் போது நடைபெற்ற சண்டையில் அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சிறைபிடிக்கப்பட்டு பின்னர் பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்டார்.
பிப்ரவரி 27 அன்று பாகிஸ்தானுடனான வான்வழி மோதலின் போது தனது விண்டேஜ் மிக் -21 பைசன் விமானத்திலிருந்து எஃப் -16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் ஒரே விமானி என்ற தனித்துவமான பெருமையை இந்த விங் கமாண்டர் பெற்றுள்ளார்.
பாக்கிஸ்தானிய ஜெட் விமானங்களுடனான போரின் போது அவரது மிக் 21 பைசன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு கீழே சென்றபின் பிப்ரவரி 27 அன்று அவரை பாகிஸ்தான் அதிகாரிகள் சிறைபிடித்தனர். அவரது பாராசூட் சறுக்கி பாக்கிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் உள்ளே விழுந்தபோது பாகிஸ்தான் ராணுவத்தால் அவர் கைது செய்யப்பட்டார்.