ஹாட்ஸ்டாரில் 100 மில்லியன் பார்வையாளர்கள், சாதனை படைத்த இந்தியா-பாக்கிஸ்தான் போட்டி!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ஹாட்ஸ்டாரில் 100 மில்லியன் பார்வையாளர்கள், சாதனை படைத்த இந்தியா-பாக்கிஸ்தான் போட்டி!

வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையில் முதலிடத்தில் ஹாட்ஸ்டார் நிறுவனம்

ஹைலைட்ஸ்
 • 100 மில்லியன் பயன்பாட்டாளர்கள் என்பது ஒரு புதிய சாதனை
 • அதிகபடியாக ஒரே நேரத்தில் 15.6 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது
 • பார்வையாளர்களில் 66 சதவிகிதம் பேர் குறு நகரங்களில் உள்ளவர்களதான்

2019 உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மோதிய போட்டி அன்று, 100 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பதிவாகியுள்ளார்கள். இந்த தகவலை ஹாட்ஸ்டார் நிறுவனம் கடந்த திங்கட்கிழமையன்று வெளியிட்டது. இந்த போட்டியின் போது அதிகபடியாக ஒரே நேரத்தில் 15.6 மில்லியன் பார்வையாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும் இந்த போட்டியை பார்வையிட்டவர்களில் 66 சதவிகிதம் பேர், பெரு நகரங்களை தாண்டி குறு நகரங்களில் உள்ளவர்களதான் என்ற தகவலையும் ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. 

ஜூன் 16 அன்று இந்தியா - பாக்கிஸ்தான் அணிகள் மோதிய நாளில் 100 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பதிவானது என்பது, இந்த தளத்தில் ஒரு புதிய சாதனை என ஹாட்ஸ்டார் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக விவோ ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தின்பொழுது அதிகபடியாக ஒரே நேரத்தில் 18.6 மில்லியன் பார்வையாளர்கள் பதிவாகியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா விளையாடிய மற்ற போட்டிகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா - பாக்கிஸ்தான ஆட்டம் 1.7 மடங்கு அதிக நிகழ் நேர பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. எந்த ஒரு ஒருநாள் போட்டிகளுக்கும் இல்லாத அளவில், இந்த போட்டி அதிகபடியாக ஒரே நேரத்தில் 15.6 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது.

"இவ்வளவு பெரிய கிரிக்கெட் பார்வையாளர்களுக்கு, நாங்கள் தடையில்லாத கிரிக்கெட் அனுபவத்தை அளிக்கிறோம் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது", என்று ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரியான வருண் நாரங் (Varun Narang) கூறியுள்ளார்.

வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை வழங்குவதில், அமேசான் ப்ரைம் வீடியோ, சோனிலைவ், நெட்பிலிக்ஸ் ஆகிய நிறுவனங்களை கடந்து ஹாட்ஸ்டார் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. பாப்-அப் செல்ஃபி வசதியுடன் வெளியாகியுள்ள ‘ஒப்போ K3’- விலை, அம்சங்கள், அதிரடி ஆஃபர் விவரங்கள்!
 2. நோக்கியா வெளியிடும் முதல் ஆண்ட்ராய்டு போன்..!?- பரபர தகவல்கள்
 3. இன்று வெளியாகிறது ‘ஒப்போ K3’: எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்!
 4. சுழலும் கேமரா வசதியுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி A80; விலை மற்றும் ஆரம்ப தள்ளுபடி விவரம்!
 5. தொடரும் ‘ரெட்மீ K20’ விலை சர்ச்சை: மனம் திறந்த சியோமி நிறுவனம்!
 6. இந்தியாவில் நெட்பிளிக்ஸின் குறைந்த விலை 'மொபைல் ஒன்லி' திட்டம்!
 7. வைரலாகும் 'ஃபேஸ்ஆப்', இந்திய பயன்பாட்டாளர்களை ப்ளாக் செய்கிறதா?
 8. இன்று துவங்குகிறது 'ரியல்மீ X'-ன் 'ஹேட்-டூ-வெய்ட்' சேல்!
 9. 8 மணி நேர பேட்டரியுடன் Mi ப்ளூடூத் நெக்பேண்ட், இந்தியாவில் அறிமுகம்!
 10. மூன்று பின்புற கேமராக்களுடன் 'Mi A3' ஸ்மார்ட்போன் அறிமுகம்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.