ஸ்விகி, உபெர் ஈட்ஸுக்கு டஃப் கொடுக்கும் சொமேட்டோ- ‘இனிஃபினிட்டி டைனிங்’ திட்டம் அறிமுகம்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ஸ்விகி, உபெர் ஈட்ஸுக்கு டஃப் கொடுக்கும் சொமேட்டோ- ‘இனிஃபினிட்டி டைனிங்’ திட்டம் அறிமுகம்!

எத்தனை பேரை வேண்டுமானாலும் இந்த ‘இன்ஃபினிட்டி டைனிங்’ மூலம் அழைத்துச் செல்ல முடியும்

ஹைலைட்ஸ்
  • 350 உணவகங்கள் மற்றும் பார்களில் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது
  • சொமேட்டோ கோல்டு பயனர்கள் இந்தத் திட்டம் மூலம் பயன்பெறலாம்
  • கடந்த 8 மாதங்களில் கோல்டு பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம்

ஆன்லைன் உணவு டெலிவிரி ஆப்களில் முன்னணியில் இருக்கும் சொமேட்டோ, ‘இன்ஃபினிட்டி டைனிங்' என்கிற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. சொமேட்டோ கோல்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சொமேட்டோவில் குறிப்பிடப்பட்டுள்ள உணவகங்களுக்குச் சென்று அன்லிமிடெட் ஆக சாப்பிட முடியும். எந்த உணவகத்துக்குச் செல்ல விருப்பப்படுகிறோமோ அதில், சொமேட்டோ செயலியின் மூலம் முன் கூட்டியே, முன்பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும். அங்கு சென்று ஒரு டிஷ்ஷை எவ்வளவு முறை வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். கூடுதலாக சார்ஜ் செய்யப்படாது. எத்தனை பேரை வேண்டுமானாலும் இந்த ‘இன்ஃபினிட்டி டைனிங்' மூலம் அழைத்துச் செல்ல முடியும். மேலும், 6 வயது வரை இருக்கும் குழந்தைகள், இலவசமாக சாப்பிட அழைத்துச் செல்லலாம்.

உணவகங்கள் மட்டுமல்லாமல், சில குறிப்பிட்ட பார்களுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது சொமேட்டோ. 

தற்போதைக்கு இந்த புதிய திட்டத்தை மும்பை, டெல்லி மற்றும் பெங்களூருவில் மட்டும் கொண்டு வந்துள்ளது சொமேட்டோ. அங்கிருக்கும் 350 உணவகங்களை இந்தத் திட்டத்திற்குக் கீழ் கொண்டு வந்துள்ளது சொமேட்டோ. கூடிய விரைவில் மற்ற முக்கிய நகரங்களில் இத்திட்டம் விரவுபடுத்தப்படும் எனத் தெரிகிறது. 

“உணவை டெலிவரி செய்வதில்தான் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அதே நேரத்தில் இந்தத் துறையில் இருக்கும் மற்ற வாய்ப்புகளையும் நாங்கள் ஒதுக்கிவிட முடியாது. இந்தியாவில்தான் இந்த இன்ஃபினிட்டி டைனிங் திட்டத்தை முதன் முதலாக அமல் செய்கிறோம்” என்று சொமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் கவுரவ் குப்தா கூறுகிறார். 

சொமேட்டோ, தனது கோல்டு வாடிக்கையாளர்களின் அளவு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதாக கூறுகிறது. தற்போது சொமேட்டோவுக்கு இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், போர்ச்சுகல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, லெபனான், துருக்கி, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் 12.5 லட்சம் வாடிக்கையாளர்கள் இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. 


 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.