நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் சொமாட்டோ! கூடுதலாக 17 இந்திய நகரங்களில் சேவையை ஆரம்பிக்கிறது!!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் சொமாட்டோ! கூடுதலாக 17 இந்திய நகரங்களில் சேவையை ஆரம்பிக்கிறது!!

உணவு ஆர்டர் ஆப் சொமாட்டோ தனது நெட்வொர்க்கை விரிவாக்கும் நடவடிக்கையை எடுத்திருக்கிறது. ஆர்டர் செய்து உணவை பெறும் முறை நகரங்களில் அதிகரித்திருக்கிறது.

இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் காணப்படுகிறது. இதையடுத்து தனது சேவையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை பிரபல உணவு ஆர்டர் ஆப்- நிறுவனமான சொமாட்டோ செய்திருக்கிறது. 

இதன்படி தமிழகத்தின் ஆம்பூர், புலந்த்சார், ஷாஜகான்பூர், சோலன், பல்வால், ரிவாரி, மசூலிப்பட்டினம், நந்தியால், பிமாவரம், ஆங்கோல், ஸ்ரீகைகுளம், கடப்பா, கோட்டயம், கொல்லம், கன்னா, குர்தாஸ்பூர் மற்றும் தியோகர் ஆகிய 18 நகரங்களில் தனது சேவையை சொமாட்டோ விரிவுபடுத்துகிறது. 

zomato india Zomato

இதுகுறித்து சொமாட்டோ சி.இ.ஓ. மோஹித் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடிக்கையாளர்கள் மற்றும் உணவு நிறுவனங்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. எனவே வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் எங்கள் சேவையை விரிவுபடுதத விரும்புகிறோம். இப்போது 17 நகரங்களில் புதிதாக சேவையை ஆரம்பிக்கிறோம்.நாடு முழுவதும் 500 நகரங்களில் சேவை வழங்க திட்டமிட்டுள்ளோம். செப்டம்பர் 2019-க்குள் இந்த இலக்கை எட்டிவிடுவோம். '' என்று கூறியுள்ளார். 

2015 மோ மாதம் சொமாட்டோ நிறவனம் ஆரம்பிக்கப்பட்டது. உலகளவில் 24 நாடுகளில் 14 லட்சம் உணவகங்களை சொமாட்டோ கவர் செய்திருக்கிறது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.