கலக்கல் அப்டேட் பெறும் ‘வாட்ஸ்அப்’..!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
கலக்கல் அப்டேட் பெறும் ‘வாட்ஸ்அப்’..!

2.19.106 பேட்டா வாட்ஸ்அப் செயலிதான் இந்த அப்டேட்டைப் பெறப் போகிறது. 

ஆண்ட்ராய்டு போன்களில் இருக்கும் வாட்ஸ்அப் செயலிக்கு பல அசத்தலான அப்டேட்கள் ரிலீஸ் ஆகப் போவதாக தகவல் வந்துள்ளது. 2.19.106 பேட்டா வாட்ஸ்அப் செயலிதான் இந்த அப்டேட்டைப் பெறப் போகிறது. 

இந்த அப்டேட் மூலம் வாட்ஸ்அப்-க்கு புதிய யூசர் இன்டர்ஃபேஸ், ஸ்க்ரீன் ஷாட் எடுப்பதைத் தடுப்பது போன்ற வசதிகள் இருக்கலாம் எனப்படுகிறது. 

WABetaInfo வெளியிட்ட தகவல்படி, 2.19.106 என்கின்ற புதிய வாட்ஸ்அப் வெர்ஷன் வெளியிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய அப்டேட்டைப் பெறுவதன் மூலம் வாட்ஸ்அப் டூடுல் வசதியைப் பெறலாம். அதன் மூலம், ஸ்டிக்கர்ஸ், இமோஜிஸுக்கு என்று தனியாக ஒரு டேப் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்த ஸ்டிக்கர் மற்றும் இமோஜிக்களை சுலபமாக கண்டறிய தேடுதல் ஆப்ஷனையும் வாட்ஸ்அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது. 

பயோ-மெட்ரிக் உள்நுழைவு மூலம் இந்த புதிய வாட்ஸ்அப் அப்டேட் செயலியில் உள்ளே நுழைந்தால், ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாது. வாட்ஸ்அப் செயலியை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது இருக்கும் வாட்ஸ்அப் வெர்ஷனில் இந்த வசதி இல்லை. 

வரும் வாரங்களில் இந்த புதிய வாட்ஸ்அப் அப்டேட் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.