வாட்ஸ்அப் க்ரூப் அட்மினா இருக்கீங்களா?-இந்த அப்டேட் பற்றி தெரிஞ்சுக்கோங்க

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
வாட்ஸ்அப் க்ரூப் அட்மினா இருக்கீங்களா?-இந்த அப்டேட் பற்றி தெரிஞ்சுக்கோங்க
ஹைலைட்ஸ்
  • இந்த அப்டேட் ioS மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் விடப்பட்டுள்ளது
  • சீக்கிரமே அனைத்து தளங்களுக்கும் இந்த அப்டேட் விடப்படும்
  • க்ரூப் செட்டிங்ஸ் மூலம் இந்த அப்டேட் கிடைக்கப் பெறுகிறது

மெசேஜிங் செயலிகளில் முன்னணியில் இருக்கும் வாட்ஸ்அப் தொடர்ந்து அப்டேட்களை கொடுத்த வண்ணம் உள்ளது. அதன் நீட்ச்சியாக தற்போது, ‘வாட்ஸ்அப் க்ரூப்’-க்கான ஒரு புதிய அப்டேட்டை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அப்டேட்டின் மூலம், வாட்ஸ்அப் குழுவில் இருக்கும் செட்டிங்ஸ் ஆப்ஷனுக்குள் சென்று ஒரு தகவலை எல்லோருக்கும் அனுப்ப வேண்டுமா அல்லது அட்மின்களுக்கு மட்டும் அனுப்ப வேண்டுமா என்பதை தேர்வு செய்ய முடியும். அதேபோல, ‘க்ரூப் இன்ஃபோ’-வை எல்லாரும் எடிட் செய்யலாமா அல்லது அட்மின் மட்டும் எடிட் செய்யலாமா என்பது குறித்தும் இந்த அப்டேட் மூலம் தேர்ந்தெடுக்க முடியும். மேலும், வாட்ஸ்அப் குழுவில் இருக்கும் மற்ற அட்மின்கள், குழுவை உருவாக்கிய நபரை வெளியேற்ற முடியாத வகையிலும் இந்த அப்டேட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பல வாட்ஸ்அப் குழுக்குளக்குத் தேவைப்படும் இந்த அப்டேட் தற்சமயம், வாட்ஸ்அப் பேட்டா, மற்றும் ஐபோன் வாட்ஸ்அப்களில் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. சீக்கிரமே மற்ற வாட்ஸ்அப் வெர்ஷன்களுக்கும் இந்த அப்டேட் வசதி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் க்ரூப்புக்காக மேலும் பல அப்டேட்களை, அந்நிறுவனம் அடுத்தடுத்து களத்தில் இறக்க ஆயத்தமாகி வருவதாகவும் தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.


 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.