“இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்..!”- நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த WhatsApp அப்டேட்

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
“இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்..!”- நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த WhatsApp அப்டேட்

Android-ற்கான WhatsApp இறுதியாக fingerprint lock அம்சத்தை பெற்றுள்ளது

ஹைலைட்ஸ்
  • வாட்ஸ்அப் முதலில் ஐபோனில் பயோமெட்ரிக் அங்கீகாரத்தைக் கொண்டு வந்தது
  • ஐபோனுக்கான வாட்ஸ்அப் ஃபேஸ் ஐடி மற்றும் டச் ஐடி இரண்டையும் ஆதரிக்கிறது
  • Android பயனர்கள், கைரேகை அம்சத்தை முதலில் வாட்ஸ்அப் பீட்டாவில் பெற்றனர்

ஆண்ட்ராய்டுக்கான (Android) கைரேகை லாக் (Fingerprint Lock) அறிமுகம் செய்வதாக வாட்ஸ்அப் (WhatsApp) வியாழக்கிழமை அறிவித்தது. இந்த அம்சத்துடன், பேஸ்புக்கிற்குச் சொந்தமான நிறுவனம் இறுதியாக ஆண்ட்ராய்டு செயலியில் பயோமெட்ரிக் அங்கீகாரத்தைக் (biometric authentication) கொண்டுவருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி முதல் டச் ஐடி (Touch ID - fingerprint recognition) மற்றும் ஃபேஸ் ஐடி (Face ID - facial recognition) இரண்டையும் ஐபோன் பயனர்கள் அனுபவித்து வருகின்றனர். அம்சத்துடன், Android பயனர்கள் இப்போது தானாகவே செயலியை லாக் செய்துகொள்ள முடியும். மேலும், அவர்களின் கைரேகையால் மட்டுமே திறக்க முடியும். வாட்ஸ்அப் சமீபத்திய ஹேக்கிற்கு (hack) நன்றி தெரிவிக்கும் நேரத்தில் இந்த அம்சம் வந்துள்ளது. மேலும், ஸ்பைவேர் (spyware) தயாரிப்பாளரான என்எஸ்ஓ (NSO) குழுமத்திற்கு எதிரான வழக்கு உட்பட அதன் வீழ்ச்சியை ஹேக் (hack) சாத்தியமாக்கியதாகக் கூறப்படுகிறது.

Android-ற்கான WhatsApp Fingerprint Lock:

ஐபோன் பயனர்களுக்காக இயக்கப்பட்ட டச் ஐடி (Touch ID) அம்சத்தைப் போலவே, வாட்ஸ்அப் செயலியின் lock-ஐ இப்போது ஆண்ட்ராய்டு பயனர்களும் தேர்வு செய்யலாம் - அதன் பிறகு அன்லாக் செய்வதற்கு அவர்களின் கைரேகையை பயன்படுத்தவேண்டும். செயலி தானாகவே lock செய்யும் நேரத்தை, மூடிய உடனேயே, 1 நிமிடத்திற்குப் பிறகு, 30 நிமிடங்களுக்குப் பிறகு என பயனர்கள் தேர்வு செய்யலாம். செய்தியை அனுப்புபவர், செய்திகளின் உள்ளடக்கம் ஆகியவை அறிவிப்புகளில் தெரியும் என்பதை பயனர்கள் தேர்வு செய்ய முடியும்.

மேலே வழங்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்டில் நிறுவனத்தின் அம்சங்கள் தெளிவாகத் தெரியும். Android-ற்கான WhatsApp Fingerprint Lock-ஐ இயக்க, Settings > Account > Privacy > Fingerprint lock-ஐ பயனர்கள் பார்வையிட வேண்டும். கைரேகை ஆப்ஷனுடன் Unlock-ஐ இயக்கியவுடன், அவர்கள் கைரேகையை உறுதிப்படுத்த வேண்டும். உலகெங்கிலும் உள்ள Android பயனர்களுக்கு இந்த அம்சம் விரைவில் வெளிவரத் தொடங்கும்.

IOS-க்காக வாட்ஸ்அப் இப்போது கூடுதல் அம்சத்தைக் கொண்டுள்ளது - பயனர்கள் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான (biometric authentication) ஃபேஸ் ஐடியைப் (Face ID) பயன்படுத்தவும் தேர்வு செய்யலாம். குறிப்பிட்டுள்ளபடி, ஐபோன் பயனர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் டச் ஐடி (Touch ID) மற்றும் ஃபேஸ் ஐடி (Face ID) ஆப்ஷன்கள் இரண்டும் செயல்படுத்தப்பட்டன. ஆண்ட்ராய்டைப் பொறுத்தவரை, இந்த அம்சம் முதலில் பீட்டாவில் ஆகஸ்ட் மாதத்தில் தோன்றியது. மேலும், நிறுவனம் இப்போது நிலையான பதிப்பின் பயனர்களுக்கு அதன் வெளியீட்டை அறிவித்துள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.