வாட்ஸ்ஆப் கொண்டுவந்துள்ள 155 புதிப்பிக்கப்பட்ட எமோஜிக்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
வாட்ஸ்ஆப் கொண்டுவந்துள்ள 155 புதிப்பிக்கப்பட்ட எமோஜிக்கள்!

Photo Credit: WABetaInfo

வாட்ஸ்ஆப்பின் புதிய அப்டேட்

ஹைலைட்ஸ்
 • வாட்ஸ்ஆப்பின் புதிய ஆண்ட்ராய்ட் பீடா 2.19.139 வெர்சன்
 • 155 புதிப்பிக்கப்பட்ட எமோஜிக்களை கொண்டுவரவுள்ளது இந்த அப்டேட்.
 • டார்க் மோட் நீக்கப்பட்டு நைட் மோடை அளிக்கவுள்ளது


வாட்ஸ்ஆப் புதிதாக கொண்டுவரவுள்ள அப்டேட்டில் 155 எமோஜிக்களை புதிப்பித்து அறிமுகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி டார்க் மோடிற்கு பதிலாக நைட் மோட் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 155 புதுப்பிக்கப்பட்ட எமோஜிக்கள் மற்றும் நைட் மோட் வசதி ஆகியவற்றை நீங்கள் பெற, வாட்ஸ்ஆப்பின் புதிய அப்டேட்டை பதிவிறக்கம் செய்யவேண்டி இருக்கும். இந்த புதிய அப்டேட் விரைவில் கூகுள் ப்ளேயில் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த அப்டேட்டில், குறிப்பிடத்தக்கதாக, பழைய அப்டேட்களில் இருந்த டார்க் மோட் நீக்கப்பட்டு நைட் மோடை அளிக்கவுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

wabetainfo main1 Whatsapp

வாட்ஸ்ஆப்பின் புதிப்பிக்கப்பட்ட எமோஜிக்கள்

வாட்ஸ்ஆப்பின் புதிய ஆண்ட்ராய்ட் பீடா  2.19.139 வெர்சன் தான், இந்த 155 புதிப்பிக்கப்பட்ட எமோஜிக்களை கொண்டுவரவுள்ள அப்டேட். வேப்எடாஇன்போ (WABetaInfo)-வின் தகவல்படி வாட்ஸ்ஆப்பின் புதிய அப்டேட் வெகுவிரைவில், கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கப்பெரும் என தெரியவருகிறது. வாட்ஸ்ஆப் வெப்பிலும் இந்த எமொஜிக்கள் கிடைக்கப்பெரும் வகையில் இந்த அப்டேட் அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு உள்ள புகைப்படங்களில், வாட்ஸ்ஆப்பில் இருந்த பழைய எமோஜிக்களுக்கும் தற்போது புதிப்பிக்கப்பட்ட எமோஜிக்களுக்குமான வித்தியாசத்தை காணலாம். அனைத்து எமோஜிக்களிலும் சிறியதாக சின்ன சின்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது வாட்ஸ்ஆப்  நிறுவனம். இந்த எமோஜிக்கள் அடுத்த அப்டேட்டில் கிடைக்கப்பெறலாம். 

wabetainfo main Whatsapp

வாட்ஸ்ஆப்பின் நைட் மோட்

வேப்எடாஇன்போ (WABetaInfo)-வின் தகவல்படி இந்த புதிய ஆண்ட்ராய்ட் பீடா  2.19.139 வெர்சன்-ல் நைட் மோட் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரியவருகிறது. முன்னதாக வாட்ஸ்ஆப்பின் அப்டேட்களில் டார்க் மோட் என்ற வசதி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய நைட் மோட், சாட் லிஸ்ட், கால் மற்றும் ஸ்டேட்டஸ் ஆகிய அனைத்து பகுதிகளிலும் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பச்சை வண்ணத்தில் இருக்கு ஆக்சன் பட்டன்கள், இந்த நைட் மோடில் வெள்ளை நிறமாக மாறிவிடும் என கூறப்படுகிறது.

ஆனால், இந்த அப்டேட் சரியாக எப்போது வெளியாகும் என அறியப்படவில்லை.


We discussed what WhatsApp absolutely needs to do in 2019, on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. ‘அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1’ விலை அதிரடி குறைப்பு- முழு விவரம் உள்ளே!
 2. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் இருக்கட்டும்… ‘ஸ்மார்ட் டயப்பர்’ கேள்விப்பட்டிருக்கீங்களா..?
 3. பாப்-அப் செல்ஃபி வசதியுடன் வெளியாகியுள்ள ‘ஒப்போ K3’- விலை, அம்சங்கள், அதிரடி ஆஃபர் விவரங்கள்!
 4. நோக்கியா வெளியிடும் முதல் ஆண்ட்ராய்டு போன்..!?- பரபர தகவல்கள்
 5. இன்று வெளியாகிறது ‘ஒப்போ K3’: எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்!
 6. சுழலும் கேமரா வசதியுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி A80; விலை மற்றும் ஆரம்ப தள்ளுபடி விவரம்!
 7. தொடரும் ‘ரெட்மீ K20’ விலை சர்ச்சை: மனம் திறந்த சியோமி நிறுவனம்!
 8. இந்தியாவில் நெட்பிளிக்ஸின் குறைந்த விலை 'மொபைல் ஒன்லி' திட்டம்!
 9. வைரலாகும் 'ஃபேஸ்ஆப்', இந்திய பயன்பாட்டாளர்களை ப்ளாக் செய்கிறதா?
 10. இன்று துவங்குகிறது 'ரியல்மீ X'-ன் 'ஹேட்-டூ-வெய்ட்' சேல்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.