'இணையம் வாயிலாக தொலைபேசி அழைப்பு' வசதியை அறிமுகப்படுத்தியுள்ள 'Truecaller'!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
'இணையம் வாயிலாக தொலைபேசி அழைப்பு' வசதியை அறிமுகப்படுத்தியுள்ள 'Truecaller'!

ட்ரூ காலர் நிறுவனம் புதிய அறிமுகமான 'ட்ரூ காலர் வாய்ஸ்' செயலி

ஹைலைட்ஸ்
 • இணையம் வாயிலாக தொலைபேசி அழைப்பை மேற்கொள்ள 'ட்ரூ காலர் வாய்ஸ்'
 • முதலில் 'ட்ரூ காலர் வாய்ஸ் சார்ட்கட்' என ஆண்ட்ராய்டில் அறிமுகம்
 • ஜூன் 10-ல் இருந்தே ஆண்ட்ராய்டிற்கு வந்த இந்த வசதி

'இணையம் வாயிலாக தொலைபேசி அழைப்பு' சேவையை அடுத்த மாதத்திலிருந்து தனது ப்ரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டும் அறிமுகப்பத்தவுள்ளது ட்ரூ காலர் (Truecaller). தற்போது, இந்த நிறுவனம், இந்த தொழில்நுட்பத்தை சோதித்து வருகிறது. இந்த வசதி மூலம் உங்கள் மொபைல் நெட்வொர்க் அல்லது வை-பையை பயன்படுத்து, தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம். இந்த வசதியை, 'ட்ரூ காலர் வாய்ஸ்' (Truecaller Voice) என்ற தனி செயலி மூலமாக வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்போவதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ட்ரூ காலர் நிறுவனம். மேலும், இந்த செயலி சோதனையில் உள்ளது, முதலில் ஆண்ட்ராய்ட் உபயோகிப்பாளர்களுக்கே அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளது இந்த நிறுவனம்.

ட்ரூ காலர் நிறுவனம், 'ட்ரூ காலர் வாய்ஸ்' செயலி பற்றி கூறுகையில், இந்த செயலி வாடிக்கையாளர்கள் மொபைல் நெட்வொர்க் அல்லது வை-பையை பயன்படுத்து 'இலவச, உயர்தர, தாமதமற்ற' தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள உதவும் என கூறியுள்ளது. மேலும் இந்த செயலியில், அழைப்பு பதிவுகள், எஸ்எம்எஸ் இன்பாக்ஸ், தொடர்பு விவரங்கள் ஆகியவற்றையும் பார்த்துக்கொள்ளலாம். 

இன்னும் அறிமுகமாகாத நிலையில், ஆண்ட்ராய்டில் ட்ரூ காலர் செயலியை பயன்படுத்துபவர்களுக்கு 'ட்ரூ காலர் வாய்ஸ் சார்ட்கட்' என்ற பெயரில் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது ட்ரூ காலர் நிறுவனம். முன்னதாகவே ஜூன் 10 அன்றே ஆண்ட்ராய்டில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் இந்த செயலியை ஆப்பிள் ஐஓஎஸ் ஸ்டோரிலும் அறிமுகம் செய்யவுள்ளது ட்ரூ காலர் நிறுவனம்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. ‘விவோ S1’ க்ளோபல் வேரியன்ட் அறிமுகம்… முழு தகவல்கள்!
 2. “5ஜிபி இலவச இணைய சேவை!”- மீண்டும் அதிரடியில் இறங்கும் பி.எஸ்.என்.எல்
 3. டிக் டாக்கிற்கு போட்டியாக சிறந்த அம்சங்களுடன் வருகிறது புதிய ஆப்!!
 4. இன்று வெளியாகிறது எம்.ஐ A3- எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்!
 5. ரெட்மீ K20, ரெட்மீ K20 ப்ரோ போன் இன்று ரிலீஸ்: விலை & சிறப்பம்சங்கள்!
 6. ரெட்மீ K20 ப்ரோ ‘ஸ்பெஷல் எடிஷன்’ போன் இன்று விற்பனைக்கு வருகிறது- விலை மற்றும் பிற விவரம்!
 7. ஹவாய் வாட்ச் 'GT ஏக்டிவ்', இந்தியாவில் அறிமுகம்!
 8. ஜூலை 17-ல் அறிமுகமாகிறது 'Mi A3', வெளியான தகவல்கள்!
 9. இந்தியாவில் சந்திர கிரகணம் 2019: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
 10. மிண்டும் விற்பனையில் 'விவோ Z1 Pro': முழு தகவல்கள் உள்ளே!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.