நெட்ஃப்ளக்ஸை வருமானத்தில் முந்திய டேட்டிங் ஆப்பான டிண்டர்

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
நெட்ஃப்ளக்ஸை வருமானத்தில் முந்திய டேட்டிங் ஆப்பான டிண்டர்
ஹைலைட்ஸ்
  • மக்கள் 19.5 பில்லியன் டாலர் செலவழித்துள்ளனர்
  • ஆப்பிள் ஆப் ஸ்டோர் 64 சதவிகித வருவாயை பெற்றுள்ளன
  • கூகுள் பிளேயின் வருமானம் 20.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகமெங்கும் உள்ள மக்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் 19.5 பில்லியன் டாலர் செலவழித்துள்ளனர் என்று மொபைல் பயன்பாட்டு புலனாய்வு நிறுவனமான சென்சார் டவர் அறிவித்துள்ளது. 

கடந்த ஆண்டை விடை 16.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 16.7 பில்லியன் டாலர் மொத்த நுகர்வோர் பயன்பாட்டு கொள்முதலாக இருந்தது என்றும் இதில் சந்தாக்கள் மற்றும் பிரிமியம் பயன்பாடுகளில் செலவழித்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன

இந்த பகுப்பாய்வின் படி டேட்டிங்க் ஆப்பான டிண்டர் நெட்ஃப்ளக்ஸை விட அதிக வருவாய் பெற்று முதலிடத்தில் உள்ளது.  சென்சார் டவர் நிறுவனத்தின் மொபைல் நுண்ணறிவுத் தலைவர் தன்னுடைய வலைப்பதிவில் “ஆப்பிள் ஆப் ஸ்டோர் 64 சதவிகித வருவாயைக் இரண்டு ஸ்டோர்கள் மூலமாக மட்டுமே பெற்றுள்ளன. உலகளாவிய அளவில் 12.4 பில்லியன் டாலர்  நுகர்வோர்கள் இந்த பிளாட்பார்மில் செலவழித்துள்ளனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 15 சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ளது. ஆப் ஸ்டோர் 10.8 பில்லியன் டாலர் செலவினைச் செய்துள்ளது. “கூகுள் பிளேயின் வருமானம் 20.2 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆப் ஸ்டோரில் மூலமாக தரவிறக்கம் 7.4 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு 4.7 சதவீதம் சரிவை சந்தித்திருந்தது என்று நெல்சன் தெரிவித்தார்.

இருப்பினும் 2019 ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் 28.1 பில்லியன் பேர் முதல் முறையாக ஆப் ஸ்டார் ஆப் தரவிறக்கம் செய்துள்ளனர். மொபைல் விளையாட்டு சான்றிதழ்  வழங்குவதை அரசாங்கம் இடை நிறுத்தம் செய்த காரணத்தால் விளையாட்டு ஆப்களின் தரவிறக்கம்  குறைந்தது என்று சென்சார் டவர் கூறியுள்ளது.

2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட ஆப்களில்  டிக்டாக் ஆப்  மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் மற்றும் மெசெஞ்சர்  முறையாக முதலிடம் மற்றும் இரண்டாமிடத்தை வைத்துள்ளது. 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்