தென் ஆப்ரிகாவின் நாஸ்பேர்ஸ் நிறுவனத்தோடு இனைகிறதா ஸ்விகி?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
தென் ஆப்ரிகாவின் நாஸ்பேர்ஸ் நிறுவனத்தோடு இனைகிறதா ஸ்விகி?

ஸ்விகி நிறுவனம்

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சுவிகி, தெற்கு ஆப்ரிக்காவின் டெக் ஜாம்பவான் ஆன நாஸ்பேர்ஸ் உடன் இணைந்து தற்போது 1 பில்லியன் டாலர்களை (சுமார் 7,000 கோடிகளை) முதலீடு செய்ய உள்ளது. இந்தியாவில் சுமார் 50க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு தங்களது செயலி மூலம் உணவு விநியோகம் செய்யகிறது சுவிகி நிறுவனம்.

ஓலா, ஸோமாட்டோ ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக களத்தில் உள்ளது. சீனாவின் டெக் ஜாம்பவான்களும் சுவிகி நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளர்களுமான  டி.எஸ்.டி குலோபல்  மற்றும் கோட்யு மானேஜ்மெண்ட் நிறுவனம், சில சீன நிறுவனங்கள் இணைந்து தற்போது சுவிகி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். அவர்களை தொடர்ந்து தற்போது  நாஸ்பேர்ஸ் நிறுவனமும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் பெங்களூரில் தலைமையகத்தை கொண்ட இந்த நிறுவனம் சுமார் 21,000 கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்படுகிறது. இதைப் பற்றி சுவிகி நிறுவனத்திடமிருந்து எவ்வித தெளிவான பதில் வராத நிலையில். இந்த முதலீட்டை அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் உதவும் என எதிர்பாக்கப்படுகிறது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.