"பேடிஎம் ஃபர்ஸ்ட் கார்ட்": பல கேஷ்பேக் சலுகைகளுடன் அறிமுகமாகவுள்ள பேடிஎம் கிரடிட் கார்டு!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து

சர்வதேச அளவில் செயல்படும் "பேடிஎம் ஃபர்ஸ்ட் கார்ட்"

ஹைலைட்ஸ்
  • "பேடிஎம் ஃபர்ஸ்ட் கார்ட்"-க்கு 500 ரூபாய் ஆண்டு கட்டணம்
  • 50,000 ரூபாய்க்கு மேல் செலவலித்தால், அந்த ஆண்டு கட்டணம் இல்லை
  • 10,000ரூபாய் வரையில் சலுகைகள் பெற ப்ரோமோ கோட்கள் வழங்கப்படும்


சிடி வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ள பேடிஎம் நிறுவனம், தனது நிறுவனத்திற்கான முதல் கிரடிட் கார்டுகளை வெளியிடவுள்ளது. "பேடிஎம் ஃபர்ஸ்ட் கார்ட்" என அந்த கிரடிட் கார்டுகளுக்கு பெயரிட்டுள்ளது பேடிஎம் நிறுவனம். இந்த கிரடிட் கார்டுகள் ஒரு சதவிகித "யூனிவர்சல் அன்லிமிடெட் கேஷ்பேக்" சலுகை கொண்டு வரவுள்ளது.

மேலும், இந்த கார்டுகளை பெற வாடிக்கையாளர்கள், இவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என எந்த ஒரு நிபந்தனையையும் அந்த நிறுவனம் வெளியிடவில்லை. முன்னதாக இந்த "பேடிஎம் ஃபர்ஸ்ட் கார்ட்"-க்கு 500 ரூபாய் ஆண்டு கட்டணம் விதித்துள்ள இந்த நிறுவனம், ஒருவேளை வாடிக்கையாளர்களில் ஒரு வருடத்தில் 50,000 ரூபாய்க்கு மேல் பொருட்களை பெறுபவர்களுக்கு, அந்த ஆண்டு கட்டணத்தை தளர்த்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள், நேரடியாகவே பேடிஎம் செயலியில் இந்த கார்டுக்காக விண்ணப்பிக்கலாம் என்றாலும், வாடிக்கையாளர்கள், டிஜிட்டல் உலகின் நடவடிக்கையை வைத்தே இந்த கார்டுகள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. அதாவது, அவர்கள் ஆன்லைன் சந்தையில் எவ்வாறு பொருட்களை பெறுகிறார்கள் என்பதை கணக்கில் கொண்டே இந்த கார்டுகள் வழங்கப்படும்.

மேலும், இந்த கார்டுகளை பயன்படுத்தி 10,000ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குவோருக்கு, 10,000ரூபாய் வரையில் சலுகைகள் பெற ப்ரோமோ கோட்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், இந்த கிரடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ஒரு சதவிகித அன்லிமிடெட் கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவித்துள்ள இந்த நிறுவனம்,"எந்த ஒரு கட்டுப்பாடுமின்றி அனைத்து மாதமும், பணத்தை தானகவே வரவு வைத்துக்கொள்ளும்" என கூறியுள்ளது இந்த நிறுவனம். மேலும் இந்த கிரடிட் கார்டுகளுக்கு பாஸ்புக் ஒன்றையும் அளிக்கவுள்ள பேடிஎம், அதில் பேடிஎம் மற்றும் சிடி வங்கிகளின் உடனுக்குடனான சலுகைகள் மற்றும் அந்த கார்டு மூலமாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து பரிமாற்றத்தையும் அறிந்துகொள்ளலாம்.

மேலும் "பேடிஎம் ஃபர்ஸ்ட் கார்ட்"-க்கு 500 ரூபாய் ஆண்டு கட்டணம் விதித்துள்ள இந்த நிறுவனம், ஒருவேளை வாடிக்கையாளர்களில் ஒரு வருடத்தில் 50,000 ரூபாய்க்கு மேல் பொருட்களை பெறுபவர்களுக்கு, அந்த ஆண்டு கட்டணத்தை தளர்த்தவுள்ளது.

முன்னதாக 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அறிமுகப்படுத்திய டெபிட் கார்டுகளை போன்றில்லாமல், இந்த கார்டை உலகில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், அந்த டெபிட் கார்டுகளை உள்நாட்டில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

"வாடிக்கையாளர்கள் எளிதில் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள, டிஜிட்டல் மற்றும் கேஷ்லெஸ் சேவைகளை வாடிக்கையாளர்கள் எளிதில் மேற்கொள்ளவே இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது", என்று பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஒன்97 கம்மியூனிகேசன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா கூறியுள்ளார்.
 

Disclosure: Paytm's parent company One97 is an investor in Gadgets 360.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்