வாட்ஸப் சேவையைப் பெற்றது ஜியோ போன் – 20-ம் தேதிக்குள் 100% பணிகள் நிறைவடையும்

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
வாட்ஸப் சேவையைப் பெற்றது ஜியோ போன் – 20-ம் தேதிக்குள் 100% பணிகள் நிறைவடையும்

வாட்ஸப்பை பயன்படுத்த லேட்டஸ்ட் சாஃப்ட்வேரை உங்கள் ஜியோ போனில் டவுன்லோட் செய்ய வேண்டும்

ஹைலைட்ஸ்
  • ஜியோ போனுக்கான வாட்ஸப் சேவை அறிமுகம்
  • ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகம் செய்யப்படுவதாக இருந்தது
  • என்ட்-டூ-என்ட் என்க்ரிப்ஷன் டெக்னாலஜி இதில் உள்ளது

புதுடெல்லி: ஜியோ போனுக்கான வாட்ஸப் சேவை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி அடைந்துள்ளது. கடந்த 15-ந்தேதியே இந்த சேவை கய் ஓ.எஸ்.-உடன் வருவதாக இருந்தது. தற்போது வாட்ஸப் சேவை ஜியோ ஸ்டோரில் கிடைக்கிறது.

யூடியூப் வெர்ஷனுடன் வாட்ஸப் சேவை வெகு விரைவில் ஜியோபோன் 2-வில் வரும் என கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ரிலையன்ஸின் 41-வது கூட்டத்தின்போது அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது ஜியோ ஸ்டோரில் வாட்ஸப் சேவை கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-ஃபோனில் உள்ளதைப் போன்று ஜியோபோனுக்கான வாட்ஸப்பிலும் என்ட்-டூ-என்ட் என்க்ரிப்ஷன் உள்ளது. வாய்ஸை ரிக்கார்டு செய்து அனுப்பும் வசதி, குரூப் கன்வர்சேஷன் உள்ளிட்டவை இதில் இடம் பெற்றுள்ளன. ஆனால் நேரடியாக வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால்கள் செய்ய பயனாளிகளுக்கு இந்த ஆப் அனுமதி அளிக்கவில்லை.

வாட்ஸப்பை பெறுவதற்கு முன்பாக ஜியோபோனில் லேட்டஸ்ட் சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதா என்பதை பயனாளிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதுகுறித்து வாட்ஸப் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிறிஸ் டேனியல்ஸ் கூறும்போது, “இந்தியாவில் ஜியோ போன் வைத்திருக்கும் லட்சக்கணக்கான மக்கள் இப்போது வாட்ஸப் சேவையை பயன்படுத்த முடியும். கய் ஓ.எஸ்.-க்காக இந்த ஆப் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்தியர்கள் வெளிநாட்டினருடன் தொடர்பு கொள்வது எளிதாக அமையும் என்றும் சிறந்த தகவல் சேவையை மக்களுக்கு அளிக்க முடியும் என்றும் நம்புகிறோம்” என்றார்.

 


இந்தியாவில் மட்டும் வாட்ஸப்புக்கு 20 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய சேவையை எங்களுக்கு அளித்தமைக்காக ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப் நிறுவனங்களுக்கு ஜியோ நன்றி தெரிவித்துக் கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.