சுய தாக்குதல் கருத்துக்களுக்கு எதிராக இன்ஸ்டா கொண்டு வந்துள்ள விதிகள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
சுய தாக்குதல் கருத்துக்களுக்கு எதிராக இன்ஸ்டா கொண்டு வந்துள்ள விதிகள்!

சுயதீங்கு மற்றும் தற்கொலைக்கு ஏதிராக வரும் புகைப்படங்கள் மற்றும் கிராப்பிக்ஸ்களை மாற்ற இன்ஸ்டாகிராம் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

ஹைலைட்ஸ்

சுயதீங்கை பற்றிய புகைப்படங்களை நீக்க இன்ஸ்டாகிராம் ஓப்புதல்.

இளம் பெண்னின் மரணத்திற்கு பிறகு இந்த உடனடி நடவெடிக்கை

அடம் மோஸ்சேரி இந்த உடனடி முடிவை எடுத்துள்ளார்

சுயதீங்கு விளைவிக்கும் கருத்துக்களை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் மற்றும் கிராப்க் கன்டன்ட்களை தனது ஆப்பிலிருந்து நீக்க இன்ஸ்டாகிராம் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர் அடம் மோஸ்சேரி தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் பிரட்டனை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், இறந்த பெண்ணின் தந்தை இன்ஸ்டாகிராமில் வெளியாகும் சுயதீங்கு பற்றியை கருத்துக்களே தன் மகளை இப்படிய்ய தற்கோலை செய்ய தூண்டியது என கூறியதே இந்த தீடிர் விதிமுறை மாற்றங்களுக்கு காரணம் என கூறினார். 
இது பற்றி மோஸ்செரி கூறுகையில் ‘சுயதீங்கு மற்றும் தற்கொலை போன்ற தவரான செயல்களின் ஆபத்துக்களை பற்றிய கருத்துக்களை நாம் யாரும் சரிவர புரிந்துகொள்வதில்லை, இதனால் பாதிப்பின் இருக்கும் நபர்களை மீட்க உதவுவது நமது கடமை' என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் ‘இதை மாற்றும் கடமை என்னிடம் உள்ளது. இந்த நிலமையை மாற்றி, இனி இதுபோன்ற பாதிப்புக்களை ஏற்படுத்தும் கன்டென்ட்கள் வெளிவராத நிலையை உறுவாக்க வேண்டும். இதன் தொடக்கமாக, இத்துறையில் சிறந்த ஆடக்களை கொண்டு இதுபோன்ற தேவையற்ற கன்டென்ட்களை நீக்கும் பணி நடக்கிறது' என தெரிவித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த மோலி ரஸ்ஸலியின் (14 வயது) தற்கொலையை தொடர்ந்து அவரது தந்தை ஐயான் ரஸ்ஸல், மோலியின் இனஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தபோது அதில் மனச்சோர்வு மற்றும் தற்கொலை பேன்ற தலைப்பில் சோதனை செய்தை கண்டுபிடித்தார். இதனால் இன்ஸ்டாகிராம் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதற்கு பிரட்ன் அரசும் துணை நின்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ஸ்டாகிராம் தளம் இதுபோன்ற தகவல்களை தனது தேடுதல் தளத்தில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளது. இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் கூறுகையில் ‘தற்கொலை மற்றும் சுய தாக்குதல் போன்ற மனதிற்கு வேதனை அளிக்கும் சம்பவங்களை  பற்றி மக்கள் பதிறலாம் ஆனால் தற்கொலையை ஊக்குவிக்க கூடாது' என தொரிவித்து.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்