ஏப்ரல் 2 முதல் இந்த கூகுள் ஆப் வேலை செய்யாது..!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ஏப்ரல் 2 முதல் இந்த கூகுள் ஆப் வேலை செய்யாது..!

இன்பாக்ஸ் செயலியை கூகுள் கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

ஹைலைட்ஸ்
  • ஏப்ரல் 2 முதல் இன்பாக்ஸ் செயலி வேலை செய்யாது
  • ஜிமெயில் செயலியில் இன்பாக்ஸ் வசதிகளை பொருத்தி வருகிறது கூகுள்
  • இன்பாக்ஸ் செயலி மூலமே கூகுள், சேவை நிறுத்தம் குறித்து தெரிவித்து வருகிறது

அடுத்த மாதம் முதல் கூகுள் நிறுவனம், கூகுள் ப்ளஸ் சமூக வலைதளத்தை செயல்பாட்டில் இருந்து நிறுத்தப் போகிறது. அதே நேரத்தில் அதன் ‘இன்பாக்ஸ்' செயலிக்கும் அடுத்த மாதத்துடன் மூடுவிழா நடத்த உள்ளது கூகுள். இது குறித்து சென்ற ஆண்டே, கூகுள் நிறுவனம் தகவல் தெரிவித்திருந்தாலும், சரியாக எந்த நாளுடன் செயல்பாடு முற்றிலும் நிறுத்தப்படும் என்று கூறவில்லை. 

இன்பாக்ஸ் செயலி, ஒரு நாளில் அதிக மின்னஞ்சல் செய்பவர்களுக்கும் அதிக மின்னஞ்சல்களுக்கு ரிப்ளை செய்பவர்களுக்கும் ஏதுவான வகையில் உருவாக்கப்பட்ட ஒன்று. அதை வைத்து மின்னஞ்சல் அனுப்பவதில் பல விஷயங்களை சுலபமாகச் செய்ய முடியும். ஆனால், ஏப்ரல் 2 முதல் அது இருக்காது என்பது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தலாம். செயலியின் சேவை நிறுத்தம் குறித்து, கூகுள் ஆப் மூலமே தகவல் தெரிவித்து வருகிறது. 

கடந்த சில மாதங்களாக கூகுள் நிறுவனம், இன்பாக்ஸ் செயலியில் இருக்கும் பல வசதிகளை ஜிமெயில் செயலிக்கே கொண்டு வரும் நோக்கில் நடவடிக்கை எடுத்துள்ளது. சில பயனர்கள், பழைய இன்பாக்ஸ் செயலியை அப்டேட் செய்யாமல் வைத்திருந்தால், அப்படியே பயன்படுத்தலாம் என்று நினைக்கலாம். ஆனால் அந்த செயலியின் சில அடிப்படை சேவைகள் ஏப்ரல் 2 உடன் நிறுத்தப்பட உள்ளதால் பழைய செயலியை உபயோகிப்பதும் முடியாத காரியமாகவே இருக்கும். 

இன்பாக்ஸ் செயலியை இதுவரை உபயோகிக்காதவர்கள், அது எப்படி இருக்கும் என்று பார்க்க நினைத்தாலும், ப்ளே ஸ்டோரில் அதை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்காது. 

இன்பாக்ஸ் செயலியை கூகுள் கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அப்போதிலிருந்து பல சுவாரஸ்ய அப்டேட்ஸ்களை இன்பாக்ஸ் செயலிக்கு கூகுள் அளித்து வந்தாலும், அது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதனால்தான் செயலியை முற்றிலுமாக நிறுத்த கூகுள் முடிவு செய்துள்ளது. 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.